Australia vs India 1st ODI: தீபாவளி பரிசை தர தவறிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி!
Australia Cricket Team: மழையால் தடைப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு DLS விதிப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து அதை எட்டியது.

பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் (IND vs AUS) மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சுப்மன் கில் தலைமையிலான இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இலக்கை துரத்தியபோது ஆஸ்திரேலியா அணிக்காக கேப்டன் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்காக உதவினார். போட்டி தொடங்கியது முதலே அவ்வப்போது மழை பெய்ததால், போட்டி தலா 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மழையால் தடைப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு DLS விதிப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி தோல்வி:
Australia win the 1st ODI by 7 wickets (DLS method). #TeamIndia will look to bounce back in the next match.
Scorecard ▶ https://t.co/O1RsjJTHhM#AUSvIND pic.twitter.com/0BsIlU3qRC
— BCCI (@BCCI) October 19, 2025




இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து அதை எட்டியது. 223 நாட்களுக்குப் பிறகு, ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணிக்காக விளையாடத் திரும்பினர். இருப்பினும், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். நாளை அதாவது 2025 அக்டோபர் 20ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசை வழங்குவார்கள் என நினைத்தனர். இருப்பினும், இந்திய அணி தோல்வியை சந்தித்து ஆஸ்திரேலியாவிற்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் பின்தங்கியது.
இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று அதாவது அக்டோபர் 19ம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அணிக்குத் திரும்பினர். அதேநேரத்த்தில், ஆஸ்திரேலிய அணி பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் இல்லாமல் விளையாடியது. இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரர்களாக மேத்யூ ரென்ஷா மற்றும் மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணிக்கு 131 ரன்கள் இலக்கு:
டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவின் இலக்கு வெறும் 131 ரன்களாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், இரண்டாவது ஓவரில் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் தூக்க, கேப்டன் மிட்செல் மார்ஷ் மறுமுனையில் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, தொடர்ச்சியாக மூன்று ஓவர்களில் மூன்று சிக்ஸர்களை அடித்து அதைச் செய்தார். அதிலிருந்து, ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியானது. எட்டாவது ஓவரில் மேத்யூ ஷார்ட் ஆட்டமிழந்த பிறகும், போட்டி ஆஸ்திரேலியாவின் கைப்பிடிக்குள் இருப்பதாகத் தோன்றியது. பின்னர், மார்ஷ் மற்றும் ஜோஷ் பிலிப் (37) இடையேயான விரைவான 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதை உறுதி செய்தது. இறுதியில், கேப்டன் மார்ஷ், அறிமுக வீரர் மேத்யூ ரென்ஷா (21 நாட் அவுட்) உடன் இணைந்து 21.1 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.