IND vs AUS First ODI: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தா..? வானிலை நிலவரம் இதோ!
IND vs AUS First ODI Weather Update: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் (India tour of Australia 2025) இன்று முதல் அதாவது 2025 அக்டோபர் 19ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி காலை 8.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 9 மணிக்கு பெர்த்தில் தொடங்குகிறது. இந்தநிலையில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நேற்று அதாவது 2025 அக்டோபர் 18ம் தேதி பெர்த்தில் (Perth Stadium) வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், 2025 அக்டோபர் 19ம் தேதியான இன்று வானிலை எப்படி இருக்கும், மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்வோம்.
முதல் ஒருநாள் போட்டிக்கு பெர்த்தில் வானிலை எப்படி இருக்கும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி 2025 அக்டோபர் 19ம் தேதியான இன்று காலை 9:00 மணிக்கு தொடங்கும். டாஸ் அரை மணி நேரம் முன்னதாக காலை 8:30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், 2025 அக்டோபர் 19 ஆம் தேதி காலை பெர்த்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் சுமார் இரண்டு மணி நேரம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்குப் பிறகு, சிறிது வெயில் வந்தாலும், நாள் முழுவதும் வானம் மேகமூட்டமாக இருக்கும். இருப்பினும், வெப்பநிலை சுமார் 19 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி ரத்து செய்யப்படுமா?
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் போது சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஓவர் போட்டி எளிதாக நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மழை காரணமாக போட்டி நடைபெற முடியாவிட்டால், அது ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்தப் போட்டிக்கு எந்த ரிசர்வ் நாளும் அறிவிக்கப்படவில்லை.
ALSO READ: 3 சதம் அடித்தால் உலகக் கோப்பையில் வாய்ப்பா..? ரோஹித் – கோலி எதிர்காலம் குறித்து அஜித் அகர்கர்!
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்
ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, பென் த்வார்ஷிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குஹ்னேமன், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்.
ALSO READ: பெர்த்தில் பிரமாண்டம் காட்டுவார்களா கோலி, ரோஹித்..? இதுவரை செயல்திறன் எப்படி..?
இந்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல் முறை. இந்த தொடரின் 2வது போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 23ம் தேதி அடிலெய்டிலும், 3வது போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 25ம் தேதி சிட்னியிலும் நடைபெறும்.