AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026 இந்தியா – பாகிஸ்தான் போட்டி – மழையால் கைவிடப்பட்டால் யாருக்குத் தங்கப் பதக்கம்?

Ind vs Pak : ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் மழையால் கைவிடப்பட்டால் யாருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Asian Games 2026 இந்தியா – பாகிஸ்தான் போட்டி – மழையால் கைவிடப்பட்டால் யாருக்குத் தங்கப் பதக்கம்?
இந்தியா - பாகிஸ்தான் போட்டி
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Oct 2026 17:09 PM IST

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி அக்டோபர் 3, 2026 இந்திய நேரப்படி காலை 10 மணியளவில் போட்டி தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் யாருக்கு பதக்கம் வழங்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

போட்டி மழையால் கைவிடப்பட்டால் யாருக்குத் தங்கப் பதக்கம்?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல கிரிக்கெட் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தங்க மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டிகளுக்குச் சில குறிப்பிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி அக்டோபர் 3, 2026 நாளை நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க : Asian Games 2026: பைனலில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?

இருப்பினும், தொடரின் ஆரம்பக் கட்டத்தில், இதே மைதானத்தில் நடைபெறவிருந்த 4 காலிறுதிப் போட்டிகளும் இடைவிடாத கனமழையால் ஒரு பந்து கூட வீசப்படாமலேயே கைவிடப்பட்டன. அரையிறுதிப் போட்டிகள் இரண்டிலும் தெளிவான முடிவுகள் கிடைத்தாலும், வருகிற அக்டோபர் 3, 2026 அன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மழையால் கைவிடப்பட்டால் மீண்டும் போட்டி நடைபெறும் ரிசர்வ் டே எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டால் யார் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது..

ஆண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு மாற்று நாள் எதுவும் திட்டமிடப்படவில்லை. தற்போது வெளியான தகவல்களின்படி, மழையின் காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் கூட்டாகத் தங்கப் பதக்கம் வழங்கப்படும். இதே விதி மூன்றாம் இடத்திற்கான போட்டிக்கும் பொருந்தும். வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டால், இரு அணிகளும் கூட்டாக வெண்கலப் பதக்கத்தைப் பெறும்.

இதையும் படிக்க : Asian Games 2026: ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் ரீகர்வ் அணிப் பிரிவில் இந்தியாவுக்கு வரலாற்று தங்கம்

முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் என்ன விதிமுறை இருந்தது?

முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியின்போது, ​​அந்த அணி 18.2 ஓவர்களில் 112/5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ஆட்டத்தைத் தொடர முடியவில்லை. அப்போது நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஐசிசி டி20 தரவரிசையில் முன்னிலையில் இருந்ததன் அடிப்படையில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Follow Us