AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mahalakshmi Temple: சகல செல்வங்களையும் அளிக்கும் இந்த மகாலட்சுமி கோயில் தெரியுமா?

மகாதானபுரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி கோயில் குரும்ப நாயனார் வரலாறுடன் தொடர்புடையதாகும். இந்தக் கோயில், விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. அஷ்டலட்சுமிகளில் ஒருவளாக காட்சி தரும் மகாலட்சுமிக்கு, ஆடிப்பெருக்கு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் திருமணம், குழந்தைப்பேறு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிபாடு மேற்கொள்கின்றனர்.

Mahalakshmi Temple: சகல செல்வங்களையும் அளிக்கும் இந்த மகாலட்சுமி கோயில் தெரியுமா?
மகாலட்சுமி கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Jun 2025 12:41 PM IST

இந்து மதத்தில் ஏராளமான பெண் தெய்வங்கள் வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படுகிறது. ஒவ்வொரு பெண் தெய்வமும் பல்வேறு விதமான வளங்களை நமக்கு தருவதாகவும் நம்பப்படுகிறது. அப்படியாக செல்வத்தின் அதிபதியாக கருதப்படுபவள் லட்சுமி தேவி. தேவர்கள் பாற்கடலை கடையும்போது அதிலிருந்து லட்சுமி தேவி வெளிப்பட்டதாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமி தேவி (Goddess Lakshmi Devi) பல்வேறு பெயர்களை தாங்கி பல கோயில்களில் அருள்பாலிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 8 வடிவங்களாக, அதாவது அஷ்டலட்சுமிகளாக காட்சியளிக்கிறார். இத்தகைய லட்சுமி தேவிக்கு அனைத்து கோயில்களிலும் முக்கிய இடமளிக்கப்படும் நிலையில் சில இடங்களிம் அவளுக்கென தனி கோயிலும் உள்ளது. அப்படியான ஒரு லட்சுமி கோயில் பற்றியும், அதன் வரலாறு சிறப்புகள் பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த கோயில் எங்குள்ளது?

இந்த மகாலட்சுமி கோயிலானது (Karur Mahalakshmi Temple) கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் என்ற இடத்தில் உள்ளது. திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் ஊருக்கு தெற்கு பக்கமாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது காலை 6:00 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

ஆடி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராக இருந்த குரும்ப நாயனார் பிறந்தார். அவர் பெருமிழலை எனும் நகரை ஆண்ட மன்னர் சிவபெருமானிடம் பணியாற்றினார். மேலும் தன்னுடைய வாழ்க்கையில் சுந்தரமூர்த்தி நாயனாரை குருவாக ஏற்றுக்கொண்டு குரும்ப நாயனார் வாழ்ந்து வந்தார். குரும்ப இனத்தைச் சேர்ந்த இவர்கள் ஆடு மேய்ப்பதை தொழிலாக கொண்டவர்கள். இவர்களிடம் எப்போதும் ஆட்டின் முடியில் இருந்து தயாரித்த கம்பளி இருக்கும். இப்படியான நிலையில் நாயனார் பக்தியில் சிறந்தவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரிடத்திலும் பணிவாக நடந்து கொள்ளவும் செய்வார்.

தினமும் ஊர் எல்லையில் சிவனடியார்களுக்கு தேவையான உணவு, உடை போன்றவற்றை கம்பளியில் மூட்டையாக கட்டி கொடுத்து அனுப்புவதை கடமையாக கொண்டிருந்தார். நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒவ்வொரு முறையும் உச்சரித்து சிவன்தாள் போற்றும் சிவனடியாராய் திகழ்ந்தார். திருத்தொண்ட பதிகம் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்பு கொண்டு இருந்ததால் இவருக்கு அஷ்டமா சித்திகள் கிடைத்தது. இப்படியான நிலையில் இறைவன் கைலாயத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனாரை அழைக்க முடிவு செய்தார்.

இதனை அறிந்து கொண்ட குறும்ப நாயனார் தனது குருவைப் பிரிந்து தனித்து வாழ முடியாது எனவே குருவுக்கு முன்னதாக யோக நெறியின் மூலம் சிவபெருமானின் திருவடிவை சேருவேன் என முடிவு எடுத்தார். அப்படியே சிவலோகத்திற்கும் சென்று சிவனின் திருவடியின் கீழ் அமர்ந்து கொண்டார். இந்தக் குடும்ப நாயனாரின் குலதெய்வம் ஆதி மகாலட்சுமியாகும்.

திருமால் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து அமிர்தத்தை தேவர்களுக்கும், விஷத்தை அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார். இதனை தெரிந்து கொண்ட அந்த காசு உடன் என்ற அரக்கன் அன்னை மகாலட்சுமி மீது மோகம் கொண்டு அருகில் சென்றான். அவனிடமிருந்து தப்பிக்க அவள் காவிரி கரையோரமாக வழியாக ஓடினாள். அப்படியாக இந்த குரும்ப இனத்தவர்கள் மேட்டுமகாதானபுரம் என்ற பகுதியில் தங்கள் தொழிலான ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

அசுரனிடமிருந்து தப்பிக்க மகாலட்சுமி அந்த இடத்தில் இருந்த பூமிக்குள் ஒளிந்து கொண்டாள். அந்த இடத்தில் ஏற்கனவே சிவபக்தனான ராவணன் இறைவனை நினைத்து தவம் இருந்து கொண்டிருந்தான். மகாலட்சுமி வந்து ஒளிந்திருப்பதை அறிந்தவன் அவள் தன்னை அழிப்பதற்காக வந்தவள் என கருதி இலங்கைக்கு சென்று விட்டான். மகாலட்சுமி குரும்பர்கள் வைத்திருக்கும் ஆடுகளிலிருந்து பாலைக் கறந்து அவர்களுக்கு தெரியாமலேயே குடித்து வந்தாள்.

குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நிலம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மக்கள் அதனை தோண்டிய போது மகாலட்சுமி சுயம்புவாக காட்சி தந்து அசுரனிடமிருந்து தன்னைக் காக்க வேண்டி கொண்டாள். அவர்களும் மகாலட்சுமியை ஒரு கம்பளியில் சுற்றி மறைத்து வைத்து விட்டார்கள். ஆனால் இதனை தெரிந்து கொண்ட அசுரன் மக்களிடம் சண்டையிட்டு மகாலட்சுமி பிடித்து விட்டான். உடனடியாக அந்த ஊர் பெண்கள் சிவபெருமானை நினைத்து பக்தி பாடல்களை பாடியுள்ளனர்.

மேலும் முக்கண் உடைய தேங்காயை சிவபெருமான் வரும் வரை தங்கள் தலையில் உடைத்து வணங்கும் என வேண்டிக்கொண்டு அவரவர் தலையில்  உடைக்க தொடங்கினார்கள். மக்களின் பக்தியை மெச்சிய சிவன் அங்கு தோன்றி மகாலட்சுமி காப்பாற்றினார் என வரலாறு சொல்லப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள் 

இந்த கோயிலானது விஜய நகர பேரரசில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. பொதுவாக வைஷ்ணவ சமயத்தின்படி மகாலட்சுமி மூலவராக எழுந்தருளி தாமரை மலர் மீது அமர்ந்து நான்கு கரங்களிலும் தாமரை, சங்கு, சக்கரம், கதை ஆகியவை ஏந்தி காட்சி தருவது மரபு. ஆனால் இந்த கோயிலில் தனி பீடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் மகாலட்சுமி இரண்டு திருகரங்களுடன் மட்டுமே அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலை சுற்றிவர மூன்று பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.

இந்த மகாலட்சுமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு திருவிழா எது விமர்சியாக கொண்டாடப்படும். மட்டுமல்லாமல் திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்க பக்தர்கள் இங்கு வந்து அம்பாளை பிரார்த்தனை செய்கின்றனர். இந்த ஆடிப்பெருக்கு திருவிழாவில் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலையை தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கோயில் பற்றிய தகவல்கள் அமைந்துள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லை)

Follow Us