AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Lord Shani Dev: சனிக்கிழமைகளில் இந்த பொருட்கள் வாங்காதீங்க.. நிதி பிரச்னை வருமாம்!

சனிக்கிழமை, சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். சில பொருட்களை இந்த நாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. எள் எண்ணெய், கடுகு எண்ணெய், சமையல் எண்ணெய், துடைப்பம், உப்பு, கருப்பு எள், உளுந்து, இரும்பு பொருட்கள், கூர்மையான பொருட்கள் போன்றவற்றை வாங்குவது தீங்கு விளைவிக்கும் என நம்பப்படுகிறது.

Lord Shani Dev: சனிக்கிழமைகளில் இந்த பொருட்கள் வாங்காதீங்க.. நிதி பிரச்னை வருமாம்!
சனி பகவான்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jun 2025 14:18 PM IST

இந்து மதத்தில் ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில் வார விடுமுறை நாளாக பார்க்கப்படும் சனிக்கிழமை நீதியின் கடவுளான சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். சனி பகவான் நியாயத்தின் அதிபதியாக அறியப்படுகிறார். அவரின் பார்வை நல்லவர்களுக்கு கொடுக்கவும், கெட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கும் என்பது நம்பிக்கையாகும். கர்ம வினை செய்பவர்களின் ஆசிகளைப் பெற, சனி பகவானுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் சனிக்கிழமை தவறுதலாக கூட சில பொருட்களை வாங்குவது நல்லதல்ல என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவது வாழ்க்கையில் சிரமங்களுக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படி என்ன பொருட்களை எல்லாம் சனிக்கிழமை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது என்பதைப் பார்ப்போம்.

சனிக்கிழமை என்னென்ன பொருட்கள் வாங்கக்கூடாது?

சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு கோயிலில் எள் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் எள் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயையும் வாங்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் இந்நாளில் சமையல் எண்ணெய் வாங்குவது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் வீட்டை சுத்தப்படுத்தும் லட்சுமி தேவி குடியிருப்பதாக நம்பப்படும் துடைப்பம் வாங்கக்கூடாது. அப்படியே வாங்க விரும்பினால்,அதனை வெள்ளிக்கிழமை பெறலாம். சனிக்கிழமை துடைப்பம் வாங்குவது உங்கள் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கும்.

சமையலறையில் மிக முக்கிய தேவைப்படும் பொருளான உப்பை வாங்க வேண்டாம் என சாஸ்திரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சில நேரங்களில் சனிக்கிழமைகளில் தமிழ் மாதம் பிறக்கும். அந்நாளில் உப்பு வாங்குவார்கள். ஆனால் அப்படியும் கூட வாங்க வேண்டாம். ஏனென்றால் சனிக்கிழமை உப்பு வாங்குவது உங்கள் கடன்களை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் சனி பகவானின் கோபத்தை பெற வேண்டியிருக்கும். இதனை வெள்ளிக்கிழமையில் வாங்குவது மிகவும் நல்லதாகும்.

இந்நாளில் கருப்பு எள் மற்றும் உளுந்து வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். அவ்வாறு வாங்கினால் அன்றைய நாளின் உங்களின் முக்கியமான வேலை தாமதப்படுத்தலாம் அல்லது நடைபெறாமல் போகலாம். அதேசமயம் சிலர் சனி பகவானின் ஆசீர்வாதத்திற்காக கருப்பு எள் மற்றும் உளுந்தை வாங்கி தானம் செய்கிறார்கள். இது மிகவும் மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இத்தகைய சனிக்கிழமையில் இரும்பு பொருட்களும் வாங்கக்கூடாது. அது துரதிஷ்டமாக அமையும் எனவும் நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் நாம் சனிக்கிழமை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால் உறவுகளில் விரிசல் உண்டாகும் எனவும் ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us