AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: மிருகசிரீஷ நட்சத்தில் சூரிய பகவான்.. 3 ராசிகளுக்கு நல்ல காலம்!

2025 ஜூன் 8ஆம் தேதி சூரியன் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. இதனால் சிம்மம், துலாம், தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும், தொழிலில் லாபம், திருமண வாழ்வில் மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை போன்ற நன்மைகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Astrology: மிருகசிரீஷ நட்சத்தில் சூரிய பகவான்.. 3 ராசிகளுக்கு நல்ல காலம்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 31 May 2025 13:08 PM IST

ஜோதிடத்தில் கிரகங்களின் செயல்பாடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை ஒவ்வொன்றும் தனி மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கக்கூடியது. அதேசமயம் ஒவ்வொரு கிரகமும், நட்சத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு ராசிகளில் உள்ள நட்சத்திரங்களோடு கிரகங்கள் தொடர்பு கொள்கிறது. இதனால் ஏற்படும் அறிகுறிகள் கிரங்களின் செல்வாக்கு, அவற்றின் நிலைத்தன்மை மற்றும் இயக்கத்தைப் பொறுத்து அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் 2025, ஜூன் 8 ஆம் தேதி சூரிய பகவான்,  மிருகசிரீஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளின் மீது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த சஞ்சரிப்பு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணம்

சூரிய பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். 2025, ஜூன் 8 ஆம் தேதி, அவர் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், ரிஷப ராசியிலும் பிரவேசிப்பார். அப்படியான ஞாயிற்றுக்கிழமை காலை 7:26 மணிக்கு இடம்பெயரும் சூரியன், பின்னர், ஜூன் 15 அன்று ரிஷப ராசியை விட்டு வெளியேறி மிதுன ராசிக்குச் செல்வார் என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயன்பெறப்போகும் 3 ராசிகள்

சிம்மம்: மிருகசீரிஷ நட்சரத்தில் சூரியன் சஞ்சரிப்பது சிம்ம ராசி மக்களுக்கு மிகப்பெரிய பலன்களை தரப்போகிறது. அதன்படி நிதிப் பிரச்சினைகள் தீரும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கவுக்கு வரும். திருமண வாழ்க்கை, எதிர்கால திருமண வரன் உடனான காலம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். பணத்தை சேமிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. சரியான திட்டமிடல் அவசியமாகும்.  தொழில் விஷயத்தில் திட்டமிட்டபடி அனைத்து உத்திகளும் லாபத்தை கொடுக்கும்.

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் பல நிதி நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் விரைந்து முடிவடையும் வாய்ப்பு உள்ளது. உறவுகள் வலுப்பெறும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.  நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்து வந்த பிரச்சினைகள் தீரும்.

தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழில் துறையில் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு இது பொன்னான நேரமாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நிதி முன்னேற்றம் உண்டாகும்.

எப்போதும் வாழ்க்கையில் உங்களுக்கு முக்கியமானவர்களுடன் நேரத்தை செலவிட தயங்காதீர்கள். இதனால் நீங்கள் அடையப்போகும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. மேலும் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் வேலைகளை மாற்ற விரும்பினால், அது நிறைவேறும். நல்ல சம்பளத்துடன் புதிய வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டிலும் வெளியிலும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

(ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us