AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மக்களே..! தூங்கும் நேரத்தில் நிஜமாகவே தூங்குகிறீர்களா?

Stress Relief: இன்றைய வேகமான வாழ்க்கையில், தூக்கம் மட்டுமே முழுமையான ஓய்வு அல்ல; மனம் மற்றும் உணர்வுகளுக்கும் ஓய்வு அவசியம். உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளுக்கு சமநிலையான ஓய்வு கிடைத்தால்தான் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். தினசரி சிறிய மாற்றங்கள் மற்றும் சரியான ஓய்வு பழக்கங்கள் நீண்டகால ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

மக்களே..! தூங்கும் நேரத்தில் நிஜமாகவே தூங்குகிறீர்களா?
மாதிரிப்படம்Image Source: freepik
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 06 Aug 2026 11:40 AM IST

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், ஓய்வு என்ற வார்த்தைக்கு பலரும் தூக்கம் அல்லது வேலை செய்யாமல் இருப்பது என்ற ஒரு பொருளையே கொடுக்கிறார்கள். ஆனால், பல மணி நேரம் தூங்கிய பிறகும் அல்லது விடுமுறை எடுத்த பிறகும் சோர்வு நீங்கவில்லை என்று உணர்பவர்கள் ஏராளம். இதற்குக் காரணம் உடலுக்கு கிடைக்கும் ஓய்வும், மனதுக்குத் தேவையான ஓய்வும் ஒன்றாக இல்லாததே. வேலை அழுத்தம், தொடர்ந்து பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாதனங்கள், பொறுப்புகள் மற்றும் கவலைகள் ஆகியவை மனதை இடைவிடாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எனவே, உண்மையான ஓய்வு என்பது உடலை மட்டுமல்ல, மனம், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளையும் சமநிலைக்கு கொண்டு வருவதாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் தரத்தை உயர்த்த விரும்பினால், ஓய்வை ஒரு தேவையான பழக்கமாக ஏற்றுக்கொள்வது முக்கியமானது.

ஒவ்வொருவருக்கும் ஓய்வின் தேவையும் மாறுபடும்

எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஓய்வு பயனளிக்காது. சிலருக்கு போதுமான இரவு தூக்கம் கிடைத்தாலே புத்துணர்ச்சி ஏற்படும். சிலருக்கு வேலைக்கிடையில் சிறிய இடைவெளி, அமைதியான சூழல் அல்லது குடும்பத்துடன் செலவிடும் நேரமே மன நிறைவை தரும். தொடர்ந்து உடல் உழைப்பு செய்பவர்களுக்கு உடல் ஓய்வு முக்கியமானதாக இருக்கலாம்; ஆனால் அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது அதிக அவசியமாக இருக்கலாம். எனவே, தங்களுக்கு எந்த வகையான சோர்வு அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ற ஓய்வு முறையை பின்பற்றினால் மட்டுமே முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

உடல் மற்றும் மனதை சமமாக கவனிக்க வேண்டும்

உடல் சோர்வை சரிசெய்ய போதுமான தூக்கம், சத்தான உணவு, மெதுவான உடற்பயிற்சி மற்றும் ஓய்வு நேரம் மிகவும் அவசியம். அதே நேரத்தில் மனதிற்கும் ஓய்வு அளிக்க வேண்டும். நாள் முழுவதும் வேலை, சமூக ஊடகங்கள், தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் ஆகியவை மூளையை அதிகமாகச் சோர்வடையச் செய்கின்றன. சில நேரம் மொபைல் பயன்பாட்டை குறைப்பது, அமைதியாக அமர்ந்து சிந்திப்பது, புத்தகம் வாசிப்பது அல்லது இயற்கையுடன் நேரம் செலவிடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். இந்தச் சிறிய மாற்றங்களே மன அழுத்தத்தை குறைத்து, கவனத்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றன.

Also Read: உங்கள் வீட்டு செல்லக்குட்டி சேட்டை செய்கிறார்களா..? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உணர்ச்சி சமநிலையும் ஓய்வின் ஒரு பகுதிதான்

பலர் உடல் சோர்வை கவனித்தாலும், உணர்ச்சி சோர்வை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தொடர்ந்து பிறருக்காக மட்டுமே செயல்படுவது, மனதில் இருக்கும் கவலைகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைப்பது, எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் போன்றவை மன அமைதியை பாதிக்கின்றன. நம்பிக்கைக்குரியவர்களுடன் மனம் திறந்து பேசுவது, தேவையற்ற பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது, தனக்கென சிறிது நேரம் ஒதுக்குவது போன்ற பழக்கங்கள் உணர்ச்சி நலனை பாதுகாக்க உதவுகின்றன. மனநலத்தை பாதுகாப்பதும், உடல்நலத்தை பாதுகாப்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறக்கக் கூடாது.

 

Follow Us