AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொடைக்கானலில் இந்த இடங்களை ஃப்ரீயா சுற்றி பார்க்கலாம்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

Kodaikanal 4 Tourist Spots Visited For Free: கொடைக்கானலில் இந்த 4 சுற்றுலா இடங்களை வருகிற மே 31- ஆம் தேதி வரை கட்டணம் இன்றி இலவசமாக சுற்று பார்க்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொடைக்கானலில் இந்த இடங்களை ஃப்ரீயா சுற்றி பார்க்கலாம்.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கொடைக்கானலில் 4 இடங்களில் சுற்றுலா கட்டணம் கிடையாது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 25 May 2026 10:44 AM IST

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் பல்வேறு சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா தலங்களில் மக்கள் அதிக அளவு குவிந்து காணப்படுகின்றனர். இங்கு, தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் வந்து செல்கின்றனர். அதிலும், தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதன் காரணத்தினாலும், கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலைகள் தெரிந்த வண்ணமாக உள்ளன. அந்த வகையில், கொடைக்கானலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர்.

கொடைக்கானலில் இந்த 4 இடங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

அவ்வாறு சுற்றுலா சென்று வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய நற்செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொடைக்கானலில் வருகிற மே 31- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) 4 சுற்றுலா இடங்களை எந்தவித கட்டணமும் இன்றி சுற்றி பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதில், குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள் ஆகிய 4 இடங்களில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.

மேலும் படிக்க: அடர்ந்த காட்டில் அழகான நீர் வீழ்ச்சி.. ஆர்ப்பரித்து கொட்டும் இரட்டை அருவி.. டால்பின் நோஸ் வியூ பாயிண்ட்.. நீலகிரியில் இப்படியொரு இடமா!

கோடை விடுமுறை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் அறிவிப்பு

எனவே, கோடை விடுமுறையை மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், கொடைக்கானலில் மேற்கண்ட 4 இடங்களுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் எவ்வித கட்டணத்தையும் செலுத்தாமல் இலவசமாக சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்கலாம். தற்போது, கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த இலவச அறிவுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்தை எளிதாக்கும் வகையில்

மேலும், கொடைக்கானலில் சாலை போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, கொடைக்கானலில் மிகவும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருகிறது. வெயிலின் தாக்கமும் சற்று குறைவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த சீதோசன நிலையை அனுபவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க:வானுயர வளர்ந்திருக்கும் மரங்கள்.. தவழ்ந்திருக்கும் கொடிகள்.. ஆனந்தமான பரிசல் பயணம்.. ஈரோடு அருகே சூப்பர் ஸ்பாட்!

Follow Us