AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீடு எப்போதும் பளபளப்பாக இருக்கணுமா? இந்த டிப்ஸை மறக்காதீங்க!

Simple Home Cleaning Tips: வீட்டை சுத்தமாகவும் கிருமி இல்லாமலும் வைத்திருக்க தினசரி சிறிய சுத்தப்படுத்தும் பழக்கங்கள் அவசியம். சமையலறை, குளியலறை போன்ற இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சிறிய சுத்த பழக்கங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.

வீடு எப்போதும் பளபளப்பாக இருக்கணுமா? இந்த டிப்ஸை மறக்காதீங்க!
வீட்டு சுத்தம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 May 2026 17:00 PM IST

வீடு எப்போதும் சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டுமெனில் தினசரி சிறிய சுத்தப்படுத்தும் பழக்கங்களை பின்பற்றுவது மிகவும் அவசியம். பலர் வாரம் ஒருமுறை மட்டுமே முழு சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால் தினமும் தரையை துடைப்பது, மேசைகள் மற்றும் சமையலறை மேற்பரப்புகளை சுத்தப்படுத்துவது போன்ற சிறிய முயற்சிகள் தூசி மற்றும் கிருமிகள் சேராமல் தடுக்கும். குறிப்பாக கதவு கைப்பிடிகள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் அடிக்கடி தொடப்படும் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

சமையலறையை சுத்தமாக வைத்திருங்கள்

வீட்டில் அதிகமாக கிருமிகள் உருவாகும் இடங்களில் சமையலறை முக்கியமானதாக கருதப்படுகிறது. உணவு சமைக்கும் இடங்களில் எண்ணெய் கறைகள், உணவு மீதிகள் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் பூஞ்சை மற்றும் கிருமிகள் வளர வாய்ப்பு உள்ளது. அதனால் அடுப்பு, சிங்க், வெட்டும் பலகைகள் மற்றும் பாத்திரங்களை தினமும் நன்றாக கழுவுவது அவசியம். உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைக்காமல் மூடிய பாத்திரங்களில் சேமிப்பது வீட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும்.

இயற்கை சுத்தப்படுத்தும் முறைகளை பயன்படுத்தலாம்

கடுமையான ரசாயனப் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்கும் சில இயற்கை பொருட்களையும் பயன்படுத்தலாம். எலுமிச்சை, வெள்ளை வெினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை பல இடங்களில் சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுகின்றன. இவை கறைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றத்தையும் குறைக்க உதவும். குறிப்பாக சமையலறை மற்றும் குளியலறை சுத்தம் செய்ய இந்த முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.

காற்றோட்டம் வீட்டை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்

வீடு சுத்தமாக இருப்பதற்கு காற்றோட்டமும் மிகவும் அவசியம். பலர் ஏசி அல்லது பேன் பயன்படுத்துவதால் ஜன்னல்களை திறக்காமல் வைத்திருப்பார்கள். இதனால் வீட்டுக்குள் பழைய காற்று தங்கி துர்நாற்றம் ஏற்படலாம். தினமும் சில மணி நேரம் ஜன்னல்களை திறந்து வைத்தால் புதிய காற்று வீட்டுக்குள் வந்து ஈரப்பதத்தையும் குறைக்கும். இது கிருமி வளர்ச்சியைத் தடுக்கவும் உதவுகிறது.

குளியலறை சுத்தம் கவனிக்க வேண்டியது அவசியம்

குளியலறை என்பது கிருமிகள் அதிகம் பரவக்கூடிய இடமாக கருதப்படுகிறது. அதனால் கழிவறை, வாஷ் பேசின் மற்றும் டைல்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான துணிகள் அல்லது தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இருந்தால் பூஞ்சை வளர வாய்ப்பு அதிகரிக்கும். குளியலறையை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

சிறிய பழக்கங்கள் பெரிய மாற்றத்தை தரும்

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது பெரிய வேலை அல்ல. பயன்படுத்திய பொருட்களை உடனே தங்களது இடத்தில் வைப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது மற்றும் குப்பைகளை சரியான நேரத்தில் வெளியேற்றுவது போன்ற சிறிய பழக்கங்கள் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க உதவும். ஒரு சுத்தமான வீடு மன அமைதியையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்பதால் குடும்பம் முழுவதும் இந்த பழக்கங்களை பின்பற்றுவது நல்லது.

Follow Us