AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏற்காட்டில் களை கட்டும் கோடை விழா.. மலர் கண்காட்சி – நாய் கண்காட்சி ஸ்பெஷல்.. அதிகளவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!

Yercaud Summer Festival : சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடை விழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு, பல்வேறு வண்ண மலர்கள் கண்காட்சி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 May 2026 12:59 PM IST
சேலம் மாவட்டம்,  ஆத்தூரில்  ஆண்டுதோறும்  மே மாதம் கோடை விழா  கொண்டாடப்படுவது வழக்கமாகும்.  அந்த வகையில்,  இந்த ஆண்டுக்கான 49- ஆவது கோடை விழா  கடந்த மே 22- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  இந்த விழாவில்,  பல்வேறு வண்ண வண்ண மலர்களால்  விலங்குகள்  உருவம்,  ஆர்ச்,  வீடுகள்  பசுக்களை, கன்று குட்டிகள் உள்ளிட்ட  பல்வேறு  வடிவங்களில்  அமைக்கப்பட்டுள்ளன.  மேலும்,  சுற்றுலா பயணிகளின்  கண்களை கட்டி இழுக்கும் வகையில்  வண்ண விளக்குகள்  ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.  இதனால்,  ஏற்காடு கோடை விழா  களைகட்டி உள்ளது.

1 / 5
ஏற்காட்டில் அமைந்துள்ள  அண்ணா பூங்காவில்  பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான வடிவமைப்புகள் மற்றும் கண்காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.  மேலும்,  அந்த பகுதியில்  இதமான,  குளுமையான  சூழலும் நிலவி வருகிறது. மேலும்,  தோட்டக்கலை சார்பில்  அண்ணா பூங்காவில் மலர்கள்,  பலன்கள்  மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை கொண்டு பல்வேறு வகையான  கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மலர்களால் ஆன தொட்டிகளும்  காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

2 / 5
இந்த கோடை விழாவில்  ஒவ்வொரு நாளும் மாலை  பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வகையான போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில்,  இன்று ஞாயிற்றுக்கிழமை (  மே 24-  ஆம் தேதி)  கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப் பிராணிகள்  கண்காட்சி  நடைபெற்றது. இதில்,  ஏராளமான பொதுமக்கள்  மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் கிளிகள், பறவைகள், பூனைகள்,  அல்சேஷன், பொமேரியன், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு இன நாய்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

3 / 5
இதே போல, ராஜபாளையம் கோம்பை சிப்பி பாறை உள்ளிட்ட  நாட்டின நாட்டு இன வகை நாய்களை  கண்காட்சிக்கு  கொண்டு வந்திருந்தனர். இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில செல்லப்பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்த கோடை விழாவானது  வருகிற  மே 28- ஆம் தேதி ( வியாழக்கிழமை)  வரை நடைபெற உள்ளது.  தற்போது,  தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள்  சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர்.

4 / 5
அதன்படி,  ஏற்காட்டிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  குவிந்து பொழுதை கழித்து வருகின்றனர்.  அவர்களின்  பொழுதை போக்கும் வகையில்  கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால், ஏற்காட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காணப்படுகின்றனர்.

5 / 5
Follow Us