AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலையில் டீ குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையுமா? விவரம் இதோ!

Weight Loss Tips : நம்மில் பலருக்கு தினமும் காலையில் தேநீர் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் எடை குறைக்க விரும்புவோருக்கு இந்தப் பழக்கம் சற்றுத் தடையாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்போது இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். 

காலையில் டீ குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையுமா? விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 Jun 2025 23:46 PM IST

டீ குடிப்பதால் எடை அதிகரிப்பதில்லை. ஆனால் டீயில் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படும் விதத்தைப் பொறுத்து அது அமையும். குறிப்பாக பாலில் கொழுப்பு அதிகம். உங்கள் தேநீரில் அதிகமாக சர்க்கரை சேர்த்துக்கொள்வீர்கள் என்றால், ஒரு கப் தேநீரிலிருந்து சுமார் 100 கலோரிகளை உங்கள் உடல் எடுத்துக்கொள்ளும். அதனால்தான் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை தேநீர் அருந்துபவர்களின் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். இது போதாதென்று, பலர் தேநீர் அருந்தும்போது பிஸ்கட், சிப்ஸ், பஜ்ஜி, சமோசா போன்ற அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார்கள். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுவும் எடை அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் டீ குடிப்பதை நிறுத்தாமல் அதே நேரம் டீ குடிக்கும் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

டீ பழக்கத்தை நிறுத்தாமல் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

  • தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் அல்லது தேனைப் பயன்படுத்துங்கள்.
  • முழு கொழுப்புள்ள பாலை விட குறைவான கொழுப்பைக் கொண்ட டோன்ட் மில்க்கைப் பயன்படுத்துங்கள்.
  • தேநீருடன் நீங்கள் சாப்பிடும் பஜ்ஜி, பிஸ்கட் போன்ற சிற்றுண்டிகளுக்கு பதிலாக நட்ஸ், முளைத்த தானியங்கள் அல்லது காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
  • ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே தேநீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.

இந்த மாற்றங்களைச் செய்வதன் மூலம், தினமும் உடலுக்குள் நுழையும் தேவையற்ற அதிகப்படியான கலோரிகளைக் குறைக்கலாம். இது உங்கள் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும். பாலில் தயாரிக்கப்படும் வழக்கமான தேநீருக்குப் பதிலாக, நீங்கள் கிரீன் டீ, பிளாக் டீ அல்லது துளசி, இஞ்சி போன்ற மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகை தேநீர்களை குடிக்கலாம். இவற்றில் கலோரிகள் குறைவு. உடலை நச்சு நீக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் மன ரீதியாக உற்சாகமாக உணர்வீர்கள்

எந்த உணவையும், அளவாக உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது தேநீருக்கும் பொருந்தும். ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறை தேநீர் குடிப்பது செரிமான அமைப்பை பலவீனப்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதனால்தான் சுகாதார நிபுணர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தேநீர் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.

எடை குறைக்க நீங்கள் தேநீர் குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் தேநீர் தயாரிக்கும் விதத்திலும், அதனுடன் சாப்பிடும் சிற்றுண்டிகளிலும் கவனமாக இருந்தால், நீங்கள் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம். சிறிய மாற்றங்கள் பெரிய நன்மைகளைத் தரும்.

Follow Us