இலவசங்கள் வழங்கினால் மக்கள் வேலைக்கு செல்வார்களா? நிதி எங்கே கிடைக்கிறது? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

SC Questions TN Govt : இலவச திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? தொடர்ந்து இலவசங்களை வழங்கினால் மக்கள் வேலைக்கு செல்வார்களா என நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இலவசங்கள் வழங்கினால் மக்கள் வேலைக்கு செல்வார்களா?  நிதி எங்கே கிடைக்கிறது? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published: 

19 Feb 2026 14:49 PM

 IST

புதுடெல்லி, பிப்ரவரி 19 : தமிழ்நாடு மின்வாரிய வழக்கு தொடர்பான வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 19, 2026 அன்று உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) விசாரணைக்கு வந்ததது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசின் இலவச திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இலவச மின்சாரங்கள் என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களும் வழங்கி வருகின்றன. வசதியானவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தை பெறுகிறார்கள். இப்படி இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? இது குறித்து தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலுக்கு இலவசங்களை வழங்குவது இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இலவச திட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 19, 2026 அன்று விசாரணைக்கு வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி ஆகியோர் விசாரித்தனர். இந்த நிலையில் இலவச திட்டங்கள் குறித்து தமிழ்ாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு அதிரடி கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து பேசிய நீதிபதி, அரசின் சலுகைகளை தகுதியானவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. சமீப காலங்களாக தேர்தல் நடந்த மாநிலங்களில் திடீரென நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் இனி வேலைக்கு செல்வார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது என்றார்.

இதையும் படிக்க : அரசு பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்கள் குறித்து விமர்சனம்… ஓட்டுநர்-நடத்துநர் மீது பாய்ந்த நடவடிக்கை!

மேலும் பேசிய அவர், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க தமிழக அரசுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? இலவசங்கள் அறிவிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். அதிக கடன் மற்றும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மாநிலங்கள் தொடர்ந்து இலவசங்களை வழங்கினால் எப்படி வளர்ச்சி ஏற்படும்?

மேலும் இலவசங்களை தொடர்ந்து வழங்கினால் பல மாநிலங்கள் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அது பற்றி பட்ஜெட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இலவச திட்டங்கள் இறுதியில் வரி செலுத்துவோர் மீது தான் விழுகிறது. இதுபோன்று தேவையற்ற வகையில் செய்யும் செலவுகளை கல்விக்கு செலவிடலாம். இலவசங்களுக்கா பயன்படுத்தும் நிதியை வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க :  மத்திய-மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்… உயர்நிலைக் குழுவின் 11 முக்கிய பரிந்துரைகள்!

அனைத்து அரசியல் கட்சிகளும் இலவசங்களை அறிவிப்பதற்கு முன் சற்று யோசிக்க வேண்டும். இலவச திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பல இலவச திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இலவச திட்டங்கள் குறித்து அதிரடியாக கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!