AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. திமுகவில் புது முகத்துக்கு வாய்ப்பு- அதிமுகவில் மும்முனை போட்டி!

Rajya Sabha MP Seats: தமிழகத்தில் பதவிக்காலம் முடிவடைய உள்ள 6 ராஜ்ய சபா எம்பிக்கள் இடம் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், புது முகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், மும்முனை போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள்.. திமுகவில் புது முகத்துக்கு வாய்ப்பு- அதிமுகவில் மும்முனை போட்டி!
திமுக-அதிமுக கூட்டணியில் யாருக்கு எம்பி பதவி ஒதுக்கப்படும்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Feb 2026 10:14 AM IST

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதில், திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான என். ஆர். இளங்கோ, பி. செல்வராசு, திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி சோமு மற்றும் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான எம். தம்பிதுரை, கூட்டணி கட்சியை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பணியிடங்கள் உட்பட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் மார்ச் 16- ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற பிப்ரவரி 26- ஆம் தேதி ( வியாழக்கிழமை) தொடங்குகிறது. தற்போது, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 32 உறுப்பினர்கள் இருந்தால் ஒரு ராஜ்ய சபா எம்.பி.யை தேர்வு செய்ய முடியும்.

திமுகவில் யாருக்கு எம். பி. பதவி

அந்த வகையில், தமிழகத்தில் காலியாக கூடிய 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், திமுகவில் 4 மேல்சபை எம்பி சீட்டுகள் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதில், என். ஆர். இளங்கோ மற்றும் திருச்சி சிவா ஆகியோருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதுபோக, 2 எம்.பி.பதவிகள் புதிய முகங்களுக்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ரமலான் நோன்பு தொடக்கம்… பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

தேமுதிகவுக்கு அதிமுக அளித்த வாக்குறுதி

இதே போல, அதிமுக வசம் இருக்கும் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை பெறுவதற்கு அந்த கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதில், கடந்த மாநிலங்களவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த எம்.பி. சீட் வழங்கப்படாமல் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தேமுதிக அதிருப்தி அடைந்த நிலையில், தற்போதைய மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் வழங்கப்படும் என்று அதிமுக உறுதி அளித்தது.

அதிமுக கூட்டணியில் மும்முனை போட்டி

இதை எதிர்பார்த்து, தேமுதிக கூட்டணியை முடிவு செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அன்புமணியும் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதே போல, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிய அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் மேல்சபை எம்.பி. பதவியை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இதில், அதிமுக கூட்டணிக்குள் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், அதிமுக தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

மேலும் படிக்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 22 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!