AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரமலான் நோன்பு தொடக்கம்… பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

Ramadan Fasting Begins : தமிழகம் முழுவதும் நேற்று புதன்கிழமை பிறை தென்பட்டதாக அரசு தலைமை காஜி முஃப்தி என்பி உஸ்மான் முஹியித்தின் பாகவி மழஹிரி காஸிமி அறிவித்ததை அடுத்து, இன்று வியாழக்கிழமை முதல் இஸ்லாமியர்கள் நோன்பை தொடங்கி உள்ளனர் .

ரமலான் நோன்பு தொடக்கம்… பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்கினர்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Feb 2026 08:31 AM IST

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு முன்பும், ரம்ஜான் நோன்பு இருப்பதற்கு முன்பும் வானில் பிறை தெரிய வேண்டும். அவ்வாறு, பிறை தெரியும் பட்சத்தில் தான், ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி, நேற்று முன்தினம் பிப்ரவரி 18 (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபியாவில் ரம்ஜான் நோன்புக்கான பிறை தெரிந்தது. அதன்படி, சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனித ரமலான் மாதம் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 18) காலை முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் பிறை தெரிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வானில் தென்பட்ட ரமலான் பிறை

அதன்படி, நேற்று புதன்கிழமை ( பிப்ரவரி 18) மாலை ரமலான் மாதத்துக்கான பிறை பல்வேறு இடங்களில் தெரிந்தது. அதன்படி, இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி முஃப்தி என்பி உஸ்மான் முஹியித்தின் பாகவி மழஹிரி காஸிமி அறிவித்தார். இது தொடர்பாக அரசு தலைமை காஜி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தென்பட்டது.

மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

இதைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை ( பிப்ரவரி 19) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குகிறது. அதன்படி, இன்று இரவு முதல் பள்ளி வாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெற உள்ளன. இறை அருளுமு், அமைதியும் சூழும் இந்த ரம்ஜான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களது கனிவான ரமலான் முபாரக் நல்வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

அதன்படி, இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கி உள்ளனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் நடைபெற்ற தராவீஹ் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். இதில், சென்னை அமைந்த கரையில் உள்ள ஜாமியா பள்ளி வாசல் உள்ளிட்ட ஏராளமான பள்ளி வாசல்களில் அதிகாலை முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

மேலும் படிக்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 22 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!