AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை!

Bomb Threat To Parliament: புதுடெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் 9 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை!
நாடாளுமன்றத்துக்கு வெடி குண்டு மிரட்டல்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Feb 2026 11:44 AM IST

தேசிய தலைநகர் புது டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்றம் மற்றும் பள்ளிகளுக்கு இன்று பிப்ரவரி 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த டெல்லி வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் நாடாளுமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. பின்னர், இது வெறும் புரளி என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருந்தாலும், இந்த வெடிகுண்டு எச்சரிக்கை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றம் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் “டெல்லி காலிஸ்தானாக மாறும்” என்றும் “காலிஸ்தான் தேசிய இராணுவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உலகம் முதுமை நோக்கி செல்கிறது.. இந்தியா இளமையும் வளர்ச்சியும் நோக்கி செல்கிறது – பிரதமர் மோடி..

நாடாளுமன்றத்தில் 13- ஆம் தேதி குண்டு வெடிக்கும்

மேலும், இன்று திங்கள்கிழமை காலை 7:22 மணிக்கு இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. இதில் திங்கள் கிழமை மதியம் 1 11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனவும், பிப்ரவரி 13- ஆம் தேதி மதியம் 1:11 மணிக்கு நாடாளுமன்றத்தில் குண்டு வெடிப்பு நிகழும் எனவும் அந்த மின்னஞ்சல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் விவரம்:

  • லோரெட்டோ கான்வென்ட் பள்ளி, டெல்லி கான்ட்.
  • கேம்பிரிட்ஜ் பள்ளி, ஸ்ரீனிவாசன்புரி
  • வெங்கடேஷ்வர் பள்ளி, ரோகிணி
  • கேம்பிரிட்ஜ் பள்ளி, நியூ பிரண்ட்ஸ் காலனி
  • இந்தியன் பள்ளி, சாதிக் நகர்
  • சி.எம் பள்ளி, ரோகிணி
  • டிடிஏ பள்ளி, ஐஎன்ஏ
  • பால பாரதி பள்ளி, ரோகிணி

ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகரில் உள்ள முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்னஞ்சலை அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Bomb Threat

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின்னஞ்சல்

மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகரில் நான்கு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்… தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!!

Follow Us