இந்தியாவில் 50 லட்சம் டன் பெட்ரோல் இருப்புகள்… பிரதமர் நரேந்திர மோடி தகவல்!
Prime Minister Narendra Modi: இந்தியாவில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 50 லட்சம் டன்னுக்கும் அதிகமான பெட்ரோலிய இருப்புகள் நிறுவி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் என்.எக்ஸ்.டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: நாட்டில் முதலில் எரிசக்தி அணுகலை அதிகரிக்க உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். 2- ஆவதாக எரிசக்திக்காக நாம் வெளிநாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. இது எரிசக்தி துறையில் தன்னம்பிக்கையே அதிகரித்துள்ளது. சிலிண்டர் பற்றாக்குறை பிரச்சனையில் எதிர்க்கட்சிகள் தங்களது சொந்த நிகழ்ச்சி நிழலை பின்பற்றி விமர்சித்து வருகிறது. நாட்டில் விநியோக சங்கிலியில் உள்ள தடைகளை சமாளிப்பதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2024- ஆம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குறைந்தபட்ச பெட்ரோலிய இருப்புகள் மட்டுமே இருந்தது. தற்போது அவை 50 லட்சம் டன்களுக்கும் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன.
போரின் நெருக்கடியை சரி செய்ய முயற்சி
இதே போல கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் நாட்டில் எல்பிஜி இணைப்புகள் மற்றும் எல்என்ஜி முனையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக நாட்டை பாதித்திருந்தாலும், நெருக்கடியை சரி செய்வதில் அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சிலர் பீதியை உருவாக்கி தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலை தொடர முயற்சி செய்கின்றனர். அவர்களைப் பற்றி நான் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர்கள் முழு நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள் என்று நான் நிச்சயமாக கூறுவேன்.
மேலும் படிக்க: மாதவிடாய் காலத்தில் ‘கட்டாய விடுப்பு’ கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து..




உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசித்தேன்
போரின் காரணமாக ஏற்படும் உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்தால் எந்த நாடும் பாதிக்கப்படாமல் இல்லை. அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அனைவரும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு நாடுகளின் உயர் மட்ட தலைவர்களுடன் விவாதித்தேன். பெட்ரோலியம் மற்றும் டீசல் துறையில் திறன் மேம்பாட்டில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். கடந்த 2014- ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் மூலோபாய பெட்ரோலிய இருப்புகள் மற்றும் நெருக்கடி காலங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் சேமிக்கப்பட்ட கச்சா எண்ணெய் மிக குறைவாகவே இருந்தன.
33 கோடி வீடுகளில் எல்பிஐி இணைப்புகள்
தற்போது 50 லட்சம் டன்களுக்கும் அதிகமான மூலோபாய பெட்ரோலிய இருப்புகளை நாம் நிறுவியுள்ளோம். கடந்த 2014- ஆம் ஆண்டு வரை நாட்டில் 14 கோடி எல்பிஜி இணைப்புகள் மட்டுமே இருந்தன. தற்போது, அதைவிட 2 மடங்குகள் அதிகமாகி உள்ளன. 33 கோடி வீட்டுகளில் எல்பிஜி இணைப்புகள் பெற்றுள்ளன. கடந்த 2014- இல் நாட்டில் 4 எல்என்ஜி முனையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, அவற்றின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் நெருக்கடியில் உர விலைகள் அதிகரித்ததையும் அதற்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீதான பாதிப்பை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் படிக்க: எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு – அவசரமாக கேஸ் புக் செய்ய தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு