ஜந்தர் மந்தர் சர்ச்சை: “வழிதவறிய இளைஞர்களுக்கு சரியான பாதை காட்ட வேண்டும்” – பிரதமர் மோடி..
இளமையில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதே இளமைதான் அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. சமூகத்தில் கோபம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த இளைஞர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதோ, அவர்களை துன்புறுத்துவதோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வழிதவறிய இளைஞர்கள். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நமது கடமை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 1, 2026: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், அதுகுறித்து பிரதமர் மோடி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “ஜந்தர் மந்தரில் நடந்த சம்பவத்தை நாடும் உலகமும் பார்த்துள்ளது. சில வழிதவறிய இளைஞர்கள் நாகரிகமான சமூகத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்தினர். என்னையும், மறைந்த என் தாயாரையும் அவதூறாக பேசியுள்ளனர். ஆனால் அவதூறான வார்த்தைகளால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது” என்று கூறினார்.
டெல்லி போராட்டம் குறித்து வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி:
View this post on Instagram
மேலும், “இளமையில் தவறுகள் நடப்பது இயல்புதான். அதே இளமைதான் அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. சமூகத்தில் கோபம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அந்த இளைஞர்களை தண்டிப்பதோ, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதோ, அவர்களை துன்புறுத்துவதோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் வழிதவறிய இளைஞர்கள். அவர்களுக்கு சரியான பாதையை காட்டுவது நமது கடமை” என்றார்.
மேலும் படிக்க: “தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது!”.. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பிடிவாதம்!!
மேலும், “நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் அதே மனப்பான்மையுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற வேண்டும்” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரதமர் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்:
இந்த விவகாரம் தொடர்பாக, ஜூலை 23ஆம் தேதி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கேள்வித்தாள் கசிவு எதிர்ப்பு போராட்டத்தின் போது, 25 வயது பெண் ஒருவர் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவுகள் 352, 353(1), 356(1) ஆகியவற்றின் கீழ் முதலில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் ‘ஜீரோ எஃப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக டெல்லி பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
மேலும் படிக்க: காவிரி விவகாரம்.. முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்… டி. கே. சிவகுமார் திடீர் அறிவிப்பு!