AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆம்புலன்ஸ் இல்லாததால் சிறுவனை ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற பெற்றோர்!

Parents Carry Son On Stretcher On Road | மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிறுவன் ஒருவரை அனுமதித்திருந்த பெற்றோர், அந்த மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததன் காரணமாக சில கிலோ மீட்டர்களுக்கு சிறுவனை ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிச் சென்றுள்ளனர்.

ஆம்புலன்ஸ் இல்லாததால் சிறுவனை ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற பெற்றோர்!
மகனை ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற பெற்றோர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2026 23:54 PM IST

போபால், ஜூன் 07 : மத்திய பிரதேசத்தில் (MP – Madhya Pradesh) அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லாதது மற்றும் மருத்துவர்களின் அலட்சியமாக பணியால், பெற்றோர் தங்களது 12 வயது மகனை ஸ்டிரெச்சரில் வைத்து இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையே அலைந்துக்கொண்டு இருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள அந்த அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆம்புலன்ஸ் இல்லாததால் ஸ்டிரெச்சரில் வைத்து மகனை தள்ளிச் சென்ற பெற்றோர்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியை சேர்ந்த 12 வயதான ஆதர்ஷ் என்ற சிறுவனை அவரது பெற்றோர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக அனுமதித்துள்ளனர். அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சிறுவனை அருகில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : மத்திய கிழக்கு போர்.. பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

அதற்காக சிறுவனின் பெற்றோர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தேடி அலைந்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி அவர்கள் தங்களது மகனை ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து தள்ளிக்கொண்ட உயர் சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிறுவனை சோதித்த மருத்துவர்கள் மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு.. சிறையில் இருந்தவர் கனடா செல்ல அனுமதி.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அலைக்கழித்த அரசு மருத்துவனை மருத்துவர்கள்

இந்த முறையும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் மீண்டும் ஸ்டிரெச்சரில் வைத்து சிறுவனை முன்பு இருந்த அதே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு அந்த சிறுவனின்  பெற்றோர் தங்களது மகனை ஸ்டிரெச்சரில் வைத்து அலைந்துக்கொண்டு இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Follow Us