AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 ஆண்டுகள் காதல்.. மனைவியை உதறிவிட்டு மாமியாரை கரம் பிடித்த நபர்.. உபியில் ஷாக் சம்பவம்!

Man Married Mother In Law | உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு மாமியார் உடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது தனது மாமியாரையே கரம் பிடித்துள்ளார்.

4 ஆண்டுகள் காதல்.. மனைவியை உதறிவிட்டு மாமியாரை கரம் பிடித்த நபர்.. உபியில் ஷாக் சம்பவம்!
திருமணம் செய்துக்கொண்ட மாமியார் மருமகன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 21:12 PM IST

லக்னோ, ஜூன் 08 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) ஒருவர் தனது மனைவியை உதறிவிட்டு, மாமியாரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.  நான்கு ஆண்டுகளாக மாமியாருடன் ரகசிய காதலில் இருந்த அவர், தற்போது மாமியாரை கரம் பிடித்துள்ளார். இந்தியாவில் தாய்க்கு நிகராக மாமியார் உறவு பார்க்கப்படும் நிலையில், இந்த நபர் மாமியாரையே திருமணம் செய்துள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியை உதறிவிட்டு மாமியாரை கரம் பிடித்த நபர்

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரின் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் அந்த நபர். அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்ப தகராறு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே மன கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற தம்பதி, பிரிந்து வாழும் முடிவை எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : அங்கன்வாடி ஊட்டச்சத்து மாவில் பாம்பு.. ம.பியில் கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மருமகனுக்கு ஆதரவாக இருந்து வந்த மாமியார்

கணவன் – மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மருமகனுக்கு ஆதரவாக அவரது மாமியார் உடன் இருந்து வந்துள்ளார். ஆறுதலாக தொடங்கிய இந்த உறவு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாமியாரும், மருமகனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் மாயமாகியுள்ளனர்.

இதையும் படிங்க : ஆம்புலன்ஸ் இல்லாததால் சிறுவனை ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிச் சென்ற பெற்றோர்!

வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் கான்பூரில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். அங்கு அவர்கள் அனைத்து ஆவணங்களையும் வழங்கி சட்டப்பூர்வமாக தங்களது திருமணத்தை பதிவு செய்துக்கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த கையோடு அவர்கள் நீதிமன்றத்தின் முன்பாக நின்று மாலை மாற்றிக்கொண்டுள்ளனர். அவர்கள் கழுத்தில் மாலை, கைகளில் சான்றிதழ் உடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow Us