ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட சக பயணி.. பகீர் சம்பவம்!
Drunk Passenger Pushes Woman | கேரளாவில் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவரை அதே ரயிலில் பயணம் செய்த நபர் கீழே தள்ளிவிட்டுள்ளார். அந்த பெண் தனது தோழியுடன் பயணம் செய்த நிலையில், அந்த பெண்ணையும் அவர் கீழே தள்ளிவிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வர்க்கலா, நவம்பர் 03 : கேரளாவில் (Kerala) ரயிலில் குடி போதையில் பயணம் செய்த பெண் ஒருவர் சக பயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட அந்த பெண் தனது தோழியுடன் பயணம் செய்த நிலையில், அந்த நபர் அந்த பெண்ணையும் கீழே தள்ளிவிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்த பெண்களை மர்ம நபர் கீழே தள்ளிவிட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயிலில் பயணம் செய்தவரை கீழே தள்ளிவிட்ட சக பயணி
சோனு என்ற பெண் எர்ணாகுளத்தில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் பயணம் செய்துக்கொண்டு இருந்த அதே ரயிலில் பயணம் செய்த ஒருவர் சோனுவை கீழே தள்ளியுள்ளார். சோனுவும் அவரது தோழி அர்ச்சனாவும் ஆலுவாவில் ரயில் ஏறி திருவனந்தபுரத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சோனுவை கீழே தள்ளிவிட்ட அந்த நபர் அவரது தோழியையும் தள்ளிவிட முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர் படிகட்டுகளை பிடித்து கத்தி கூச்சலிட்ட நிலையில், சக பயணிகள் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க : உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸே, இரு உயிர்களை பறித்த சோகம்!




தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்ணை மீட்ட ரயில்
மர்ம நபர் கீழே தள்ளிவிட்டதன் காரணமாக சோனு ரயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்துள்ளார். இந்த நிலையில், அந்த வழியாக வந்த மெமு ரயில் ஒன்று சோனுவை மீட்டு வர்க்கலா ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. பின்னர் அவர், கோட்டயத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு உள் ரத்தபோக்கு எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிங்க : பள்ளியின் 4வது மாடியிலிருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை… ஜெய்ப்பூரில் பரபரப்பு சம்பவம்
விசாரணைக்கு ஒத்துழக்காத குற்றவாளி
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் கோட்டயத்தில் இருந்து ரயிலில் ஏறியதாக கூறப்படுகிறது. பெயிண்டரான அவர் மது போதையில் இருந்த நிலையில், இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அந்த நபர் அப்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
ரயிலில் தனது தோழியுடன் பயணம் செய்த பெண்ணை மர்ம நபர் கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.