AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!

Grandmother Tied Hand and Leg of Fiver Years Old Grand Daughter | பஞ்சாப்பில் உள்ள பாரித்கோட் பகுதியில் தனது 5 வயது பேத்தியை பெண் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் வீட்டின் வெளியே கட்டிப்போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!
வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Apr 2026 00:01 AM IST

பரித்கோட், ஏப்ரல் 16 : பஞ்சாப் (Punjab) மாநிலம், பாரித்கோட் பகுதியில் தனது 5 வயது பேத்தியை பெண் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் வீட்டின் வெளியே கேட்டில் கை மற்றும் காள்களை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்டு கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அரசு, அந்த பெண் துணை காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீடியோ வைரலான நிலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

அந்த பெண் போலீஸ் அதிகாரி தனது பேத்தியை ஒரு துணியை கொண்டு கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, அவரை வீட்டின் கேட்டில் கட்டிப்போட்டுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட நிலையில் அலறி துடித்த சிறுமியின் குரல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியின் நிலையை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அந்த பெண் போலீஸ் மீது தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் பெற்றோர் போர்ச்சுக்கலில் உள்ள நிலையில் அவர்கள் சிறுமியை தனது பாட்டியிடம் விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் சிறுமிக்கு இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அந்த போலீஸ் அதிகாரியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Follow Us