Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

COVID-19 Variant: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. இதுவரை 1,828 பாதிப்புகள் பதிவு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

India COVID-19: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. புதிய ஓமிக்ரான் துணை வகை NB.1.8.1 காரணமாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் 79 புதிய பாதிப்புகள், கேரளாவில் 727 பாதிப்புகள், குஜராத்தில் 6 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

COVID-19 Variant: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. இதுவரை 1,828 பாதிப்புகள் பதிவு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
கொரோனா பாதிப்புImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2025 20:22 PM

டெல்லி, மே 30: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு (Corona) நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் புதிய மாறுபாடு வகை காரணமாக பாதிப்பானது மீண்டும் அதிகரித்து வருகிறது. 2025 மே 30ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் இதுவர 1,828 கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா பாதிப்பால் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதில் 6 பேர் மகாராஷ்டிராவில் (Maharashtra) மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், மகாராஷ்டிரா அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. குஜராத் (Gujarat) மாநிலத்தை பொறுத்தவரை, 2025 மே 29ம் தேதியான நேற்று, 8 மாத குழந்தை உட்பட, 6 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் 800 ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு:

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் இதுவரை 727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் ஓமிக்ரான் ஜே.என் மாறுபாடு எல்.எஃப்7 பாதிப்புகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிராவில் 9,500 க்கு மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 2025 மே 29ம் தேதியான நேற்று மட்டும் 79 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தலைநகர் மும்பையை பொறுத்தவரை 2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை 379 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 1 பாதிப்பும், 2025 ஏப்ரல் மாதத்தில் 4 பாதிப்புகளும், மே மாதத்தில் மட்டும் 373 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது.

2025 ஜனவரியில் கொரோனா புதிய வகை மாறுபாடு கண்டுபிடிப்பு:

2025 மே 29ம் தேதியான நேற்று ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஸ்ரீநகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை, இதுவரை 69 கொரோனா பாதிப்புகளும், கர்நாடகாவில் 100 கொரோனா பாதிப்புகளும், ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 4 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு:

ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 17 வழக்குகள் உள்ளன . தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டன. புனேவில் உள்ள NIV ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட 4 நோயாளிகளின் மாதிரிகளில், 2 பேருக்கு XFG பாதிப்பும், 2 பேருக்கு LF.7.9 பாதிப்பும் கண்டறியப்பட்டன. உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில், மீரட்டைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சமீபத்தில், டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.