Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எய்ட்ஸ்-ஐ குணப்படுத்த முடியுமா? பொய்யான விளம்பரங்களுக்கு கடும் நடவடிக்கை

Illegal to Advertise Cures: புற்றுநோய், எய்ட்ஸ், ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட 56 வகை நோய்களை குணப்படுத்தும் என விளம்பரமிடுவது சட்டவிரோதம் என மருந்து உரிமம் வழங்கும் அதிகாரி டாக்டர் ஒய்.ஆர். மானேக்சா எச்சரித்துள்ளார். உச்சநீதிமன்றம் 2025 மே 26-ஆம் தேதி இதுபற்றி தீர்ப்பு வழங்கியுள்ளது.

எய்ட்ஸ்-ஐ குணப்படுத்த முடியுமா? பொய்யான விளம்பரங்களுக்கு கடும் நடவடிக்கை
பொய்யான விளம்பரங்களுக்கு கடும் நடவடிக்கைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 30 May 2025 19:09 PM

சென்னை, மே 30: புற்றுநோய், எய்ட்ஸ், ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட 56 வகை நோய்களை குணப்படுத்தும் என விளம்பரமிடுவது சட்டவிரோதம் என மருந்து உரிமம் வழங்கும் அதிகாரி டாக்டர் ஒய்.ஆர். மானேக்சா எச்சரித்துள்ளார். உச்சநீதிமன்றம் 2025 மே 26-ஆம் தேதி இதுபற்றி தீர்ப்பு வழங்கியுள்ளது. மாயத் தீர்வு மற்றும் தடைசெய்யத்தக்க விளம்பரங்கள் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும். தவறான விளம்பரங்களை காணும் பொதுமக்கள் complaintsdmrtn@gmail.com-க்கு புகார் அளிக்கலாம். சட்டவிரோத விளம்பரங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய மரபு மருத்துவத்துறை அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைப்பெற்று வந்த வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த 2025 மே 26-ஆம் தேதி முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “மருந்து மற்றும் மாயத் தீர்வு (தடைசெய்யத்தக்க விளம்பரங்கள்) சட்டம், 1954 மற்றும் 1955” பிரிவுகளின் கீழ், 56 வகையான நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரமிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற விளம்பரங்கள் நீதிமன்ற அவமதிப்பாகவும், தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

விளம்பரத்துக்கு தடை செய்யப்பட்ட 56 நோய்கள்

தடை செய்யப்பட்ட நோய்களில் குடல்அழற்சி, தமனிதடிப்பு, பார்வையின்மை, ரத்தவிஷம், பிரைட்ஸ்நோய், புற்றுநோய்கள், கண்புரை, காதுகேளாமை, நீரிழிவுநோய், மூளை மற்றும் கண் நோய்கள், கருப்பை மற்றும் மாதவிடாய் கோளாறுகள், நரம்பு மண்டல கோளாறுகள், புரோஸ்டேட் சுரப்பி கோளாறுகள், வீக்கம், காக்காவலிப்பு, பெண்களுக்கு பொதுவான நோய்கள், அனைத்து வகை காய்ச்சல்கள், வலிப்பு நோய்கள், பெண்மார்பின் அமைப்பு தொடர்பான பிரச்சினைகள், பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள், கேங்க்ரீன், தைராய்டு வீக்கம் (காய்டர்), இதய நோய்கள், உயர்/குறைந்த ரத்த அழுத்தம், விதைவீக்கம், ஹிஸ்டீரியா உள்ளிட்ட மனநோய்கள், போலியோவாதம், தொழுநோய், லுகோடெர்மா, டெட்டனஸ், லோகோ மோட்டர் அட்டாக்ஸியா மற்றும்

லூபஸ், நரம்புதளர்ச்சி, உடல்பருமன், பக்கவாதம், பிளேக், ப்ளூரிசி, நிமோனியா, வாதநோய், சிதைவுகள், ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத் திறன் குறைபாடுகள், பெரியம்மை, உடல் உறுப்புகளை பெரிதாக்குதல், பெண்மகப் பேறின்மை, டிராக்கோமா, காசநோய், கட்டிகள், டைபாய்டு காய்ச்சல், இரைப்பைக் குடல் புண்கள், பாலியல் நோய்கள் (சிபிலிஸ், கோனோரியா, கிரானுலோமா), எய்ட்ஸ் மற்றும் ஆஸ்துமா ஆகியவை அடங்கும். இவை அனைத்தையும் “சிகிச்சையால் முழுமையாக குணப்படுத்தலாம்” என்று கூறும் விளம்பரங்கள் சட்டவிரோதமாகும்.

எச்.ஐ.வி தொடர்பான அனைத்து தகவல்களுக்கும்

பொதுமக்களுக்கு அறிவுரை; எப்படி புகார் அளிப்பது?

இத்தகைய ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை மக்கள் சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களில் பார்த்தால், உடனடியாக complaintsdmrtn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம். இந்த வகை தவறான விளம்பரங்களை வெளியிடும் நபர்கள் மீது “தடைசெய்யத்தக்க விளம்பரங்கள் சட்டம் – 1954”ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் மானேக்சா தெரிவித்தார்.