AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய் – அறிகுறிகள் என்ன?

India’s Childhood Diabetes Crisis : இந்தியாவில் குழந்தைகளிடம் டைப் 1 சர்க்கரை நோய் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டைப் 1 சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன ? அதற்கு தீர்வு என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய் – அறிகுறிகள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 May 2025 23:38 PM IST

 உலகிலேயே அதிகமான குழந்தைகள் டைப் 1 சர்க்கரை நோயால் (Type 1 Diabetes) பாதிக்கப்பட்டிருக்கும் நாடாக இந்தியா (India) மாறியிருக்கிறது. இது வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுவதில்லை. உடலில் பித்தக்குழாய் (pancreas) இன்சுலின் எனும் ஹார்மோனின் உற்பத்தியை நிறுத்திவிடுகிறது அல்லது மிகக் குறைவாக உற்பத்தி செய்வதன் விளைவாக இந்த பிரச்னை ஏற்படுகிறது.  டைப் 1 சர்க்கரை நோய் பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரிடையே தோன்றுகிறது. இது வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் இப்போதும் இது குறித்த விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, பலர் தாமதமாகவே இதைப் பற்றி அறிந்து சிகிச்சை பெறுகிறார்கள். அதனால் நோயின் பாதிப்பு தீவிரமடைந்த பிறகே இதுகுறித்த புரிதல் ஏற்படுகிறது.

குழந்தைகளிடம் அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், 81.4 சதவிகித குழந்தைகளில் அதிக சிறுநீர் வெளியேற்றம் (Polyuria), அதிக தாகம் (Polydipsia) ஆகியவை காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உடல் எடை திடீரென குறைவது, சோர்வு, உணர்ச்சி மாற்றங்கள் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த நிலையில் அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நிபுணர்  டாக்டர் ரேனு கண்ணா ,  டைப் 1 சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் கவனிப்பும், தகுந்த சிகிச்சையும் தேவைப்படும் ஒரு நிலை. இன்சுலின், கல்வி மற்றும் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் சாதாரண வாழ்க்கையை நடத்த முடியும்,” என்கிறார்.

சிகிச்சை முறைகள்:

இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

குழந்தைகளுக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது பெற்றோர்களுக்கு எளிதில் தெரிவதில்லை. பாதிப்பு பெரிதாகும்போது தான் அவர்களுக்கு அது தெரியவருகிறது. காரணம் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகள் இந்நோயின் அறிகுறிகள் பற்றிய புரிதல் இல்லை. கிராமப்புறங்களில் இன்சுலின் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் கிடைப்பதில் தடை இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் மக்களுக்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள இந்தியாவில் தினசரி ஏற்படும் மருத்துவ செலவுகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  டைப் 1 சர்க்கரை நோய் காரணமாக குழந்தைகள் மன அழுத்தம்,  தனிமை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

தீர்வுகள் என்ன?

பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோயின் அறிகுறிகள் மற்றும் பராமரிப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்புறங்கள் வரை இன்சுலின் மற்றும் டெஸ்ட் கிட்டுகள் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும்.  சிறுவர்களின் அறிகுறிகளை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தேவையான பயிற்சி வழங்கப்பட வேண்டும். சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அரசு ஆதரவு வழங்க வேண்டும். இந்த சிக்கலை சமாளிக்க அரசு, மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சரியான முறையில் கையாண்டால் டைப் 1 சர்க்கரை நோயை சிறுவர்கள் எளிதாக வெற்றி பெற முடியும்.

Follow Us