Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரவில் உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? உயர் இரத்த அழுத்தமாக இருக்கலாம்

High BP Signs : மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக உயர் இரத்த அழுத்த பிரச்னையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இரவில் தூங்கும்போது நமக்கு ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து உயர் இரத்த அழுத்தம் நமக்கு இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இரவில் உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? உயர் இரத்த அழுத்தமாக இருக்கலாம்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 27 May 2025 23:34 PM

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. சமீப காலங்களில் இளைஞர்களுக்கு கூட இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர். இரத்த அழுத்தம் என்பது இதயத்திலிருந்து இரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படும் போது  உருவாகும் அழுத்தம் ஆகும். உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு (Heart Attack) மூளையில் இரத்தக்கசிவு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக இரவில் தூங்கும்போது இந்த அறிகுறிகள் தெரிந்தால்  கவனமாக இருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம்.

இரவில் ஏற்படும் உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்

  • இரவில் தூங்குவதில் சிக்கல்  ஏற்பட்டால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவர் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் மிகவும் முக்கியம். இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, ​​உடலில் அதிக மன அழுத்தம் ஏற்பட்டு, மனம் அமைதியாக இருக்காது. இது தூக்கத்தைக் கெடுக்கும். இரவில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். நீங்கள் அடிக்கடி தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • இரவு நேரங்களில் தலைவலி கடுமையாக உணர்கிறீர்களா?  இரவு நேரங்களில் இப்படி கடுமையான தலைவலி ஏற்படுவது இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இது இதயம் மற்றும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். தினசரி இது தொடர்ந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியம்.
  • இரவில் கைகள் அல்லது கால்களில் எரிச்சல் மற்றும் மரத்துப்போதல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டால் அவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். இது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதன் காரணமாக இருக்கலாம். உங்கள் சருமத்தில் மாற்றங்களைக் கண்டாலும், அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது.
  • வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது இயல்பானது. ஆனால் அது அடிக்கடி ஏற்பட்டால், அது ஒரு பிரச்னை. இரவில் ஓய்வெடுக்க முடியாமல், மன ரீதியாக கவலையாக இருக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மன அழுத்தம் அதிகமாக இருந்தால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
  • நீங்கள் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தாலோ அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்தாலோ, உங்கள் கால்களில் வீக்கம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இந்த வீக்கம் இரவில் அதிகமாகத் தெரிந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கும்போது அது கால்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது,  உடலுக்கு தேவையான இரத்தம் சரியாக கிடைக்காத போது இந்த பிரச்னை ஏற்படுகிறது. இந்த அறிகுறியை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?...
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!...
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்...
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்...
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்...
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!...
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?...
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!...
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ...
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்...
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!...