AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலர்ந்த பாதாம் Vs ஊற வைத்த பாதாம் – எது சிறந்தது?

Soaked or raw almonds? பாதாம் என்பது மிகச் சிறப்பான உணவு. அவை உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பாதாமை ஊற வைத்து சாப்பிடுவது நல்லதா அல்லது நேரடியாக சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி பலரிடையே இருக்கிறது, இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலர்ந்த பாதாம் Vs ஊற வைத்த பாதாம் – எது சிறந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Jun 2025 20:57 PM IST

பாதாம் (Almond) உடலுக்கு மிகவும் நல்லது அனைவரும் அறிந்தது தான். உடலுக்கு தேவையான புரோட்டீனை (Protein) வழங்குகிறது. பாதாம் தினமும் சாப்பிடும் பலருக்கும் ஒரு பொதுவான சந்தேகம் இருக்கும். மருத்துவ நிபுணர்கள் பலரும் இரவு ஊற வைத்த பாதாமை காலையில் தோல் நீக்கி சாப்பிட சொல்கிறார்கள்.  இதனால் மக்களிடையே ஊற வைத்த பாதாம் சிறந்ததா அல்லது நேரடியாக சாப்பிடுவது சிறந்ததா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையின் படி இது குறித்து விரிவாக பார்க்கலாம். பாதாம்களில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் இ, மாங்கனீஸ் மற்றும் ஃபோலிக் ஆசிட் உள்ளதால், இதை ‘சூப்பர் ஃபுட்’ என்று கூறலாம். இது எலும்புகளை வலுப்படுத்துகிறது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது, நரம்பு மற்றும் தசை செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

ஊற வைத்த பாதாம்

பாதாமை ஊறவைத்தால் அதன் மேல் தோலில் இருக்கும் டானின் (Tannin) என்ற பொருள் நீங்கி, பாதாமில் உள்ள சத்துக்கள் நம்முடைய உடலில் முழுமையாக சென்றடையும். மேல் தோலை நீக்குவது சுலபம். எளிதில் செரிமானமாகும். மேலும் அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலில் சென்றடையும்.

உலர்ந்த பாதாம்

நேரடியாக பாதாமை சாப்பிடும்போது சத்துகள் இருப்பினும், உடலுக்கு குறைவாகவே கிடைக்கும். மேலும் சிலருக்கு ஜீரண சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது

பாதாமை ஊறவைக்கும் சரியான முறை

  • ஒரு கப் தண்ணீரில் ஒரு கைப்பிடி பாதாம்களை இரவில் ஊற வைத்து மூடவும்.

  • 6-8 மணி நேரம் கழித்து, காலை எழுந்ததும் அதை கழுவி, தோலை நீக்கி சாப்பிடலாம்.

  • ஊறவைத்த பாதாம்களை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

ஊறவைத்த பாதாமின் பலன்கள்

  • Lipase எனப்படும் ஒரு செரிமான என்சைம் பாதாமில் வெளியாகி கொழுப்பை சிறப்பாக ஜீரணிக்க உதவும்.
  • மோனோசாசுரேடட் கொழுப்புகள் பசியை குறைத்து, அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை குறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.
  • LDL என்கிற கெட்ட கொழுப்புச்சத்தை குறைந்து, HDL நல்ல கொழுப்புச்சத்து உயரும். இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படும்.
  • வைட்டமின் இ உடலில் வயதான தோற்றத்தையும், அழற்சி பிரச்சனைகளையும் தடுக்கிறது.
  • வைட்டமின் பி17 இருப்பதால் புற்றுநோயை தடுக்கும் சக்தியும் கொண்டுள்ளது.
  • ஃபோலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது, குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையானவை.

பாதாமை நேரடியாகவும் சாப்பிடலாம். ஆனால் தினசரி அவ்வாறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும்  மருத்துவ அறிவுரையின்படி தினமும் 5 முதல் 10 பாதாம்கள் வரை சாப்பிடுவது போதுமானது. சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் பாதாமின் நன்மைகள் நிச்சயம் பயன்படும்.

Follow Us