Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காளான் சாப்பிடுவது நல்லதா? அதன் வகைகள் மற்றும் நன்மைகள்..!

Mushrooms: காளான்கள் தாவரங்கள் அல்ல; பூஞ்சைகளின் குடும்பத்தைச் சேர்ந்தவை. சப்ரோபைட்டுகள், ஒட்டுண்ணிகள், மைக்கோரைசா என மூன்று முக்கிய வகைகள் உள்ளன. மைக்கோரைசா மரங்களுடன் கூட்டு வாழ்வு கொள்ளும். உண்ணக்கூடிய காளான்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும், ஏனெனில் சில காளான்கள் விஷத்தன்மை கொண்டவை.

காளான் சாப்பிடுவது நல்லதா? அதன் வகைகள் மற்றும் நன்மைகள்..!
காளான் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 31 May 2025 11:40 AM

அண்மைக்காலமாக காளான்கள் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக மாறிவிட்டன. எனினும், காளான் ஒரு காய்கறி வகையைச் சேர்ந்த பயிர் அல்ல. காய்கறிகள் தாவரங்களாகும், அவை குளோரோபில் எனப்படும் பச்சையம் மூலம் சூரிய ஒளியிலிருந்து ஆற்றலைப் பெற்று, அதை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) ஆக மாற்றி வளர்கின்றன. ஆனால், காளான்களில் குளோரோபில் இல்லாததால், அவை ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி வளர்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்த காளான்கள் தாங்கள் வளரத் தேவையான சத்தான கார்போஹைட்ரேட்டுகளை மற்ற தாவரங்களில் இருந்து பெற்றுக்கொள்கின்றன. இதனால், காளான்களை பூஞ்சை குடும்பத் தாவரமாக அடையாளப்படுத்தி உள்ளனர்.

காளான்களின் வளர்ச்சி மற்றும் வகைகள்

காளான்கள் முக்கியமாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் வகை, ‘சப்ரோபைட்டுகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள். இவை இலைகள், வேர்கள் மற்றும் இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரும். இவை அதிலிருந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் தாதுக்களை உறிஞ்சி வளருகின்றன. இந்த பிரிவில் வெள்ளை பட்டன் காளான், சிப்பி காளான்கள் போன்ற பல நல்ல சுவைமிக்க மற்றும் மருத்துவ வகை காளான்கள் அடங்கும்.

ஒட்டுண்ணி காளான்கள் மற்றும் அவற்றின் இயல்பு

இரண்டாவது வகை, ‘ஒட்டுண்ணிகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள். இவை உயிருள்ள மரங்கள் மற்றும் தாவரங்களில் வளர்ந்து, அவற்றிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி செழிப்பாக வளரும். இவை ‘காளான் கொலையாளிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு மரம் விழுந்துவிட்டால், அதன் மேல் தோன்றும் இந்தக் காளான்கள் அந்த மரத்தின் மிச்சம் மீதி சத்துக்களை உறிஞ்சி, அதை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் என்பதே இதற்குக் காரணம்.

மைக்கோரைசா வகை காளான்கள்

மூன்றாவது மற்றும் இறுதி வகை, ‘மைக்கோரைசா’ வகை காளான்கள். இவை உயிருள்ள மரங்களின் வேர்களில் வளர்ந்து ஒரு கூட்டு வாழ்வை ஏற்படுத்துகின்றன. இவை மரத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக் கொண்டு, மரத்திற்குத் தேவையான சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து உறிஞ்சித் தருகின்றன. இது ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் உறவாகும்.

காளான்களின் ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு

நிலத்தில் மற்றும் தாவரங்களில் இருந்து சத்துக்களை உறிஞ்சி வாழும் காளான்களில் இயற்கையாகவே பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவை சத்தான உணவாகக் கருதப்படுகின்றன. எனினும், அனைத்து காளான்களும் உண்ணத்தகுந்தவை அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காடுகளிலோ அல்லது இயற்கையாகவோ காணப்படும் காளான்களில் சில விஷத்தன்மை கொண்டவையாக இருக்கலாம். எனவே, அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் மற்றும் உண்ணக்கூடிய வகைக் காளான்களை மட்டுமே உட்கொள்வது பாதுகாப்பானது.