AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் போகும், இதய ஆரோக்கியம் மேம்படும் – இவ்வளவு நன்மைகளா?

Dark Chocolate Benefits : உலகில் சாக்லேட் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு. குறிப்பாக டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும், மன அழுத்தம் குறையும். இந்த கட்டுரையில் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் போகும், இதய ஆரோக்கியம் மேம்படும் – இவ்வளவு நன்மைகளா?
மாதரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 May 2025 23:37 PM IST

உலகில் சாக்லேட் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது சாக்லேட் (Chocolate ) தான்.  குறிப்பாக, டார்க் சாக்லேட் (Dark Chocolate) சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். டார்க் சாக்லேட் உடலுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் டார்க் சாக்லேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருப்பு சாக்லேட்டில் வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் கே நிறைந்துள்ளன. இவை பல வகையான நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. டார்க் சாக்லேட்டுகள் எண்டோர்பின்களின் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன. எண்டோர்பின்களின் சுரப்பு எதிர்மறை எண்ணங்களைக் குறைத்து, மன அமைதியை மேம்படுத்துகிறது.

டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளவனாயிட்ஸ் (Flavonoids) என்ற பொருள் இரத்தத்தில் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்கும். இதுவே மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துக்களை குறைக்கும். டார்க் சாக்லேட் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் மேம்பட உதவுகிறது. மேலும், டார்க் சாக்லேட் மனதை சீர்படுத்தும் ஹார்மோன்கள் (serotonin, endorphins) உற்பத்தியை தூண்டுவதால் மன அழுத்தம் குறையும். டார்க் சாக்லேட் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உடலில் உள்ள வலி மற்றும் வயது சார்ந்த செல்கள் சேதமடைவதை தடுக்கும். சருமம் பிரகாசமாகவும் இளமை தோற்றத்துடன் இருக்கவும் இது உதவுகிறது.

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நம் உடலுக்கு மிகவும் முக்கியம். இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதய பிரச்னைகளைக் குறைக்கிறது. டார்க் சாக்லேட் இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. குறிப்பாக, டார்க் சாக்லேட்டில் ஒரு தனித்துவமான அளவு காஃபின் உள்ளது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிடுவது கொழுப்பின் அளவையும் எளிதில் குறைக்கும்.

டார்க் சாக்லேட்டில் காணப்படும் பொட்டாசியம் இதயத்திற்கும் மிகவும் நல்லது. இது நாள்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் டார்க் சாக்லேட் பாதுகாக்கிறது. சில மருத்துவ நிபுணர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய செயல்பாட்டை மேம்படுத்தும் என்று கூறுகிறார்கள். சிலருக்கு, டார்க் சாக்லேட் சாப்பிடுவது வலியைக் கூட குறைக்கும். இது உடலுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. கொழுப்பைக் குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக டார்க் சாக்லேட்டை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

எப்படி எடுத்துக்கொள்வது?

  • தினமும் 20–30 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளலாம்

  • 85% க்கு மேல் கொகோ கொண்ட டார்க் சாக்லேட் தேர்வு செய்யுங்கள்.

  • சர்க்கரை, பால் சேர்க்காத வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த உணவும் அதிகமாக எடுத்தால் தீங்கு விளைவிக்கும். அதேபோல் டார்க் சாக்லேட்டையும் அளவுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஆனால் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், ஆரோக்கியம் மேம்பட உதவும்.

Follow Us