Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Male Infertility: இந்த 5 கெட்ட பழக்கங்கள்… ஆண்கள் கருவுறுதல் தன்மையை கெடுக்கும்..!

Men Health Tips: ஊட்டச்சத்து குறைபாடுகள் (Nutritional deficiencies), உடல் எடை, உடல் அல்லது மன அழுத்தம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அனைத்தும் ஆண்களின் தந்தை ஆகும் கனவை பாதிக்கலாம். புகைபிடிப்பதும் ஆண்களின் பிரச்சனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Male Infertility: இந்த 5 கெட்ட பழக்கங்கள்… ஆண்கள் கருவுறுதல் தன்மையை கெடுக்கும்..!
ஆண் கருவுறுதல் பிரச்சனைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2025 21:31 PM IST

ஒரு ஆண் தந்தையாக மாறுவது ஒரு ஆணின் மிகப்பெரிய மகிழ்ச்சி தருணமாகும். ஆனால் பல வாழ்க்கை முறை (Lifestyle) மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனையை வழிவகுக்கின்றன. மேலும், உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளும் மலட்டுத்தன்மைக்கு பங்களிக்கக்கூடும். ஒரு ஆண் தந்தையாக முடியாவிட்டால், அவரது ஆண்மை பற்றிய பயத்தை எழுப்பும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஊட்டச்சத்து குறைபாடுகள் (Nutritional deficiencies), உடல் எடை, உடல் அல்லது மன அழுத்தம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அனைத்தும் ஆண்களின் தந்தை ஆகும் கனவை பாதிக்கலாம். புகைபிடிப்பதும் ஆண்களின் பிரச்சனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம். அதன்படி, ஆண்கள் சரியான நேரத்தில் கவனம் செலுத்த வேண்டிய மிகவும் முக்கியமான பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

புகை மற்றும் மது அருந்துதல்:

சிகரெட் மற்றும் மதுவை அதிகமாக உட்கொள்வது ஆண்களின் கருவுறுதலை பாதிக்க செய்யும். சிகரெட் மற்றும் மதுவில் உள்ள நச்சு இரசாயனங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமல்லாமல் டிஎன்ஏ தரத்தையும் சேதப்படுத்துகின்றன. எனவே, அதிகப்படியான நுகர்வு ஆண்களின் ஆரோக்கியத்தையும் கருவுறுதலையும் பாதிக்கும்.

ALSO READ: மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா..? இந்த பொருட்கள் வலியை குறைக்கும்!

இறுக்கமான உள்ளாடைகள்:

ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும் வகையில் விந்தணுக்களின் வெப்பநிலை உடலை விட சற்று குறைவாக இருக்க வேண்டும். ஆனால், மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவது, மடிக்கணினியை மதியில் வைத்து மணிக்கணக்கில் வேலை செய்வது அல்லது வெந்நீரில் அடிக்கடி குளிப்பது போன்றவை விந்தணுக்களின் வெப்பநிலையை அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியில் விளைவை ஏற்படுத்தும்.

உடல் பருமன்:

துரித உணவுகள், டிட்ரான்ஸ் கொழுப்புகள், அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் ஒரு ஆணின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். உடல் பருமன் டெஸ்டோஸ்டிரோனையும் குறைக்கிறது. இது விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை என இரண்டையும் குறைக்கும்.

மன அழுத்தம்:

தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் ஆகியவையும் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கிறது. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிப்பதுடன், பாலியல் ஆசையை குறைக்கும்.

ALSO READ: பெண் கருவுறாமைக்கு இதுதான் முக்கிய காரணங்களா..? அதை எவ்வாறு தடுப்பது?

அதிகப்படியான உடற்பயிற்சி:

இப்போதெல்லாம், சில இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதே இல்லை, அதே சமயம் சிலர் உடற்பயிற்சி மீது பைத்தியமாகி ஒரு நாளைக்கு பல மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள். தினமும் 1 முதல் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, இதில் லேசான உடற்பயிற்சி மற்றும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி இரண்டும் அடங்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் அதிகப்படியான பயிற்சி உங்கள் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் கருவுறுதலையும் மோசமாக பாதிக்கிறது. ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி போலவே ஓய்வும் முக்கியமானது.