Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Men’s Health: ஆண்களிடம் காணப்படும் இந்தப் பழக்கம்.. கருவுறாமைக்கு வழிவகுக்கிறதா..?

Male Infertility Cause: உலகில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புகளில் பாதி பேர் ஆண்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, மடிக்கணினி அதிக வெப்பமடைதல், எடை அதிகரிப்பு, மனநலப் பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Men’s Health: ஆண்களிடம் காணப்படும் இந்தப் பழக்கம்.. கருவுறாமைக்கு வழிவகுக்கிறதா..?
ஆண் கருவுறாமைக்கு காரணம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Sep 2025 20:25 PM IST

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் இன்றைய காலத்தில் உடல் உழைப்பை காட்டிலும் டெஸ்க் வொர்க்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பலர் இன்னும் அதிக நேரம் வொர்க் ப்ரெம் ஹோம் (Work From Home) என்ற முறையில் அதிக நேரம் எந்திரிக்காமல் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அலுவலகத்திற்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. பலர் நாள் முழுவதும் மடிக்கணினிகளை (Laptop) முன் வைத்து வேலை செய்கிறார்கள். கூடுதலாக, வீட்டிலிருந்து வேலை செய்வது பலர் வேலை செய்யும் நேரத்தையும் பணிச்சுமை காரணமாக அதிகரித்து கொண்டனர். இது வெளியே இருந்து பார்க்கும் நபர்களுக்கு எளிதான விஷயமாக தோன்றினாலும், வேலை பார்க்கும் நபர்களில் ஆரோக்கியத்திற்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும்.

நிறைய நேரம் உட்காரும்போது இது முதுகுவலி, கழுத்து வலி, முதுகெலும்பு பிரச்சினைகள், முழங்கால் வலி அல்லது பிற நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் இது குறிப்பாக ஆண்களிடையே ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது. இதுதான் ஆண் கருவுறுதல். நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக நேரம் லேப்டாப்கள் முன்பு அதிக நேரம் வேலை செய்யும் ஆண்களிடையே மலட்டுத்தன்மை அதிகமாகக் காணப்படுகிறது.

மலட்டுத்தன்மை அதிகரிப்பு:

புள்ளிவிவரங்களின்படி, உலகில் 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்புகளில் பாதி பேர் ஆண்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, மடிக்கணினி அதிக வெப்பமடைதல், எடை அதிகரிப்பு, மனநலப் பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை இதற்குக் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. இவை அனைத்தும் விந்தணுக்களைப் பாதிக்கின்றன. இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை டிரை பண்ணுங்க!

வெப்பம்:

விந்தணு உற்பத்திக்கு உடலின் மற்ற பகுதிகளை விடக் குறைந்த வெப்பநிலை தேவைப்படுகிறது. ஒருவர் மடிக்கணினியை காலில் வைத்து வேலை செய்யும் போது, ​​விந்தணுக்களின் வெப்பநிலை உயரக்கூடும், இது காலப்போக்கில் விந்தணு உற்பத்தியை இழக்க வழிவகுக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது:

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விந்தணுக்களின் தரத்தை கெடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் செயல்பாடு இல்லாததால் இந்த பிரச்சனை ஏற்படலாம். எனவே நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது குறைந்தபட்சம் குறைந்த தூரம் நடக்கலாம்.

எடை மற்றும் வளர்சிதை மாற்றம்:

ஒரு மேஜைக்கு முன் உட்கார்ந்தபடி அதிக நேரம் வேலை செய்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். உடல் பருமன் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் தரத்தை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம் மற்றும் தூக்கம்:

மன அழுத்தம் மற்றும் சரியான தூக்கம் இல்லாததும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, தூக்கம் விந்தணுக்களின் செறிவைக் குறைக்கிறது. மேலும், நாள்பட்ட மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரோனைக் குறைக்கிறது. இது கருவுறுதலை பாதிக்கிறது.

ALSO READ: மாதவிடாய் தாமதமானால் கர்ப்பமா..? இதற்கு சில பிரச்சனைகளும் காரணம்!

இதை சரிசெய்வது எப்படி..?

  1. மடிக்கணினியை மேஜையில் வைத்துப் பயன்படுத்துங்கள்.
  2.  மடிக்கணினியை கால்களை குறுக்காக வைத்து எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தாதீர்கள்
  3. ஒவ்வொரு 30-40 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடப்பது முக்கியம்
  4. அதிகபடியான பணிச்சுமை இருந்தாலும், உங்கள் உடலுக்கும், மனதிற்கு சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.
  5. தினமும் உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், யோகா மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
  6. துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை தவிர்த்து நல்ல உணவை உண்ணுங்கள்.
  7. ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 மணிநேரம் என்ற போதுமான அளவு தூங்க முயற்சி செய்யுங்கள்.