உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை டிரை பண்ணுங்க!
Health Tips : சுவையான உணவுகளை சாப்பிடுவது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் குவிந்து அவற்றைத் தடுக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், மாரடைப்பு கூட ஏற்படலாம்.

பொதுவாக, நாம் சுவையான உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதுபோன்ற உணவுகளை நாம் தினமும் சாப்பிடுகிறோம். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காரமான சிப்ஸ், கூல் டிரிங்க்ஸ், பர்கர்கள், பீட்சா, வறுத்த உணவுகள், சீஸ் ஃப்ரைஸ் என உணவுகளை எடுத்துக்கொள்கிறோம். இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிக கொலஸ்ட்ரால் (Cholesterol) இரத்த நாளங்களில் குவிந்து அவற்றைத் தடுக்கிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை (Blood Pressure)ஏற்படுத்துகிறது.
சில சந்தர்ப்பங்களில், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உணவை மேம்படுத்துதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஜங்க் ஃபுட் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் கொழுப்பை (LDL) குறைக்கலாம். கொழுப்பைக் குறைக்கும் உணவுகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க :இதய நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..?




சோயாபீன்ஸ்
சோயாபீன்ஸ் அல்லது சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவை அடங்கும். ஒரு நாளைக்கு 25 கிராம் வரை சோயா புரதத்தை உட்கொள்வது கெட்ட கொழுப்பை 6 சதவீதம் வரை குறைக்கும்.
ஓட்ஸ்
நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், கொழுப்பைக் குறைக்கும் உணவுகளில் முக்கியமானது. அவற்றில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கிறது. இது இரத்த நாளங்களில் படியும் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்க உதவுகிறது.
பீன்ஸ்
பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. உடல் அதை எளிதில் ஜீரணிக்கச் செய்கிறது. சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிற்றை நிரப்புகிறது. ஆரோக்கியமான இதயத்திற்கு கொழுப்பைக் குறைக்க பீன்ஸ் உணவில் சேர்க்கலாம்.
கிரீன் டீ
நாம் அருந்தும் கிரீன் டீ சிறந்த தேர்வாகும். கொழுப்பை குறைக்கும் பணியில் திறம்பட செயல்படுகிறது. அதன் நுகர்வு கொழுப்பு உற்பத்தியைக் குறைக்கிறது. ஏற்கனவே குவிந்துள்ள கொழுப்பைக் குறைக்கவும் இது உதவுகிறது.
இதையும் படிக்க : அஜீரணம் – வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமா? காலையில் இந்த உணவுகளை டிரை பண்ணுங்க
மீன்
மீன்கள் சாப்பிடுவதன் மூலம் கொழுப்பின் அளவையும் குறைக்கலாம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. கூடுதலாக, ஒமேகா 3 இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
இரத்தத்தில் கொழுப்பு படிவது நாளடைவில் மாரடைப்பு பக்கவாதம் போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது தீவிரமடைவதற்கு முன் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். மேற்சொன்ன எளிய உணவுகள் மூலமாகவே இரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கலாம்.
( Disclaimer : இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு கடைபிடிப்பது மிகவும் நல்லது.)