உங்க இடுப்பு அளவு இதை விட அதிகமா? இரத்த அழுத்தம்… நீரிழிவு நோய் ஆபத்து!
Waist Size Health Risk: நம் உடலில் அதிகபடியான கொழுப்பு படிவதே கடுமையான நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. நம் இடுப்பின் அளவை வைத்தே நம் உடலில் கொழுப்பு அதிகம் படிந்திருப்பதை தெரிந்துகொள்ள முடியும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு பல கடுமையான உடல்நலப் பிரச்னைகளின் அபாயத்தைக் குறிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாகத் தோன்றினாலும், உங்கள் இடுப்பு அளவு ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத அபாயங்கள் உள்ளன. குறிப்பாக நீரிழிவு நோய் (Diabetic) முதல் புற்றுநோய் வரை கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். இடுப்பு அளவிற்கும் உடல்நலப் பிரச்னைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இடுப்பு அளவு ஏன் முக்கியமானது?
மருத்துவர் குல்கர்னி என்பவரது கூற்றுப்படி, இடுப்பு அளவு என்பது உடல் நல அபாயங்களைக் குறிக்கும் ஒரு முக்கியமான அறிகுறி. உங்கள் இடுப்பு சுற்றளவு 34 அங்குலத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் உடல் நலனை நீங்கள் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என்று அர்த்தம். இந்த அளவை விட அதிகமாக இருந்தால், வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் இடுப்பு அளவு 34 அங்குலத்திற்கு மேல் இருந்தால், கல்லீரல் மற்றும் கணையம் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுற்றி கொழுப்பு குவிந்துள்ளது என்பதைக் குறிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
இதையும் படிக்க : வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? காரணம் என்ன?




கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் இதுதான்.
மனித உடல் நீண்ட நேரம் குறிப்பிட்ட இடைவேளைகளில் சாப்பிட்டு, ஆற்றலைச் சேமிக்கும் வகையில் பரிணமித்துள்ளது. ஆனால் இப்போதெல்லாம், நாம் கிட்டத்தட்ட தொடர்ந்து சாப்பிட்டு வருகிறோம். சிலர் எப்போதும் எதையோ ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு படிவதற்கு காரணமாக அமைகிறது. இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பது, உடல் தேவைக்கு அதிகமாக கொழுப்பைச் சேமித்து வைத்திருப்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
வளர்சிதை மாற்றம் சீர்குலைந்தால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுடன் தொடர்புடைய மரபணுக்கள் வேகமாக செயல்படும் என்று டாக்டர் பாக்யேஷ் எச்சரிக்கிறார். “இது நிகழும்போது, அந்த அமைதியான அபாயங்கள் தூண்டப்பட்டு, காலப்போக்கில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
இதையும் படிக்க : தினமும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இவை பிரச்சனையை சரிசெய்யும்!
இதனைக் கட்டுப்படுத்த உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் ஒரு மணி நேரம் நடப்பது. சிறிய உடற்பயிற்சிகளை செய்வது உடலில் இருந்து கொழுப்பு படியாமல் பார்த்துக்கொள்ளும். குறிப்பாக உணவுகளுக்கு போதிய இடைவெளி விடுவது அவசியம். குறிப்பாக பசி எடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
( Disclaimer : இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு கடைபிடிப்பது மிகவும் நல்லது.)