Teeth Health: பல் துலக்கிய பின் தண்ணீர் குடிக்கக் கூடாதா? ஃப்ளூரைடின் ரகசிய பலன் தடைப்படுமா?
Brushing Teeth: பல் துலக்குதல் பிறகு உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில், பற்பசையில் உள்ள ஃப்ளூரைடு பற்களைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. தண்ணீர் குடித்தால் இந்த அடுக்கு அகற்றப்பட்டு, பற்களின் பாதுகாப்பு குறையும். குறைந்தது 10-15 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் தண்ணீர் அல்லது வேறு ஏதாவது குடிக்கலாம்.

நாம் அன்றாட மேற்கொள்ளும் பழக்கங்களில் பல் துலக்குதல் என்பது மிக முக்கியமானது. பல் துலக்குதல் ஆரோக்கியமான செயல்முறையாகும். அதிலும், காலை, இரவு என 2 வேளைகளிலும் பல் துலக்குவது சிறந்தது. இந்தநிலையில், காலை, இரவு வேளைகளில் பல் துலக்கிய பிறகு, தண்ணீர் (Drink Water) குடிக்க கூடாது என்று பலரும் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன, ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணம். பல் (Teeth) துலக்கும் பேஸ்ட் மூலம் வாயை முழுவதும் துலக்கிய பிறகு, பற்பசையிலிருந்து ஒரு மெல்லிய ஃப்ளூரைடு நமது பற்களில் படிகிறது. இந்தப் அடுக்கு பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, பல் மற்றும் ஈறுகளை பலப்படுத்துகிறது.
ஃப்ளூரைட்டின் வேலை பற்கள் மற்றும் ஈறுகளை சேதத்தைத் தடுப்பதும் ஆகும். ஆனால் இது நடக்க, அது சிறிது நேரம் பற்களில் இருக்க வேண்டும். பல் துலக்கிய உடனேயே தண்ணீர் குடித்தாலோ அல்லது வாயை கழுவினாலோ, இந்த ஃப்ளூரைடு விரைவாகக் கழுவப்பட்டுவிடும். இதன் காரணமாக, பல் துலக்கும் பேஸ்ட்டின் விளைவு முழுமையடையாமல் இருக்கும். மேலும், உங்கள் பற்கள் துவாரங்களிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படாமல் போகும்.
ALSO READ: கருமை நிற முழங்கால்களால் சங்கடமா..? இயற்கை முறையில் இப்படி பளபளக்க செய்யலாம்!
பல் மருத்துவர்கள் கூறுவது என்ன..?
பல் மருத்துவர்களின் கூற்றுப்படி, ஃப்ளூரைடு அதன் விளைவைக் காட்ட குறைந்தது 10-15 நிமிடங்கள் ஆகும். அப்போதுதான் அது பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்த முடியும். ஆரோக்கியமான பற்கள் வேண்டுமென்றால், பல் துலக்கிய பிறகு சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். தண்ணீர் மட்டுமல்ல, டீ, காபி அல்லது நீங்கள் சாப்பிடும் எதையும் பல் துலக்கிய உடனேயே தவிர்க்க வேண்டும். இந்த ஒரு பழக்கத்தின் மூலம், உங்கள் பற்களை நீண்ட காலத்திற்கு வலுவாகவும், சொத்தை பற்கள் இல்லாமல் வைத்திருக்கவும் முடியும்.
ALSO READ: சர்க்கரை சாப்பிட்டால் முடி சீக்கிரம் நரைக்குமா..? இது உண்மைதானா..?
பல் துலக்கிய உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். எதையும் குடிப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு குறைந்தது 15 நிமிடங்கள் எடுத்து கொள்ளலாம். இது உங்கள் ஆரோக்கியமான பற்களை பாதுகாக்க உதவி செய்யும். பற்களை வலுப்படுத்தவும், சொத்தை பற்கள் இல்லாததாகவும் மாற்ற, மருத்துவர்கள் எப்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் பபல் துலக்கும் பேஸ்ட்டில் உள்ள ஃப்ளூரைடு நமது பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.