Health Tips: முதலில் உடலின் எந்த பகுதியில் தண்ணீர் தொட வேண்டும்..? குளிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!
Correct Showering Technique: சரியான குளிக்கும் முறை உடல்நலத்திற்கு மிகவும் முக்கியம். தலையில் முதலில் தண்ணீர் ஊற்றுவது இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, முதலில் கால்களில் தண்ணீர் ஊற்றி, பின்னர் படிப்படியாக மேல்நோக்கி ஊற்ற வேண்டும். இது இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயம் மற்றும் மூளைக்கு திடீர் அதிர்ச்சியைத் தடுக்கும்.

தினந்தோறும் நாம் குளிப்பது நம் வாழ்வின் மிக முக்கியமான விஷயமாகும். குளித்தல் என்பது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. குளிப்பது (Showering) நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், நாம் அறியாமலேயே சில தவறுகளை செய்கிறோம். இதை பற்றி நாம் பலரும் அறிவதில்லை. இந்த தவறான குளியல் முறை நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குளிக்கும் போது உடலின் எந்த பகுதியில் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. தவறான வழியில் குளிப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை (Health Risks) ஏற்படுத்தும். அதன்படி, குளிப்பதற்கான சரியான வழி மற்றும் இந்த சிறிய பழக்கத்தை மாற்றுவது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தவறாகக் குளிப்பது என்றால் என்ன?
பலரும் இங்கு நேரடியாக குளிக்கும்போது தலையில் தண்ணீரை ஊற்றுகிறார்கள். குளிக்கும்போது திடீரென உங்கள் தலை அல்லது மார்பில் குளிர்ந்த அல்லது சூடான நீரை ஊற்றும்போது, உங்கள் உடல் அதிர்ச்சியடையக்கூடும். இது உங்கள் இரத்த அழுத்தம் விரைவாக அதிகரிக்கவோ அல்லது குறையவோ வழிவகுக்கும். இது உங்களுக்கு சில நேரத்தில் ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக உங்களுக்கு அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், சில நேரங்களில் இது உங்களை மயக்கம், சோர்வு அல்லது அசௌகரியமாகவும் உணர வைக்கும்.
ALSO READ: இதய நோய்க்கு காரணமாகும் மன அழுத்தம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – தவிர்ப்பது எப்படி?




உடலின் எந்தப் பகுதியில் முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டும்?
குளிக்கும்போது முதலில் கால்களில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் கால்களில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம், உடல் படிப்படியாக வெப்பநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுகிறது. இதன்மூலம், இது இதயம் மற்றும் மூளைக்கு திடீர் அதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
குளிப்பதற்கான சரியான வழிமுறை என்ன..?
- முதலில் உங்கள் கால்களில் தண்ணீரை ஊற்றவும்.
- பின்னர் மெதுவாக கணுக்கால்களிலிருந்து முழங்கால்கள் மற்றும் தொடைகள் வரை தண்ணீரை ஊற்றவும்.
- இதற்குப் பிறகு, கைகளிலும் பின்னர் தோள்களிலும் தண்ணீரை ஊற்றவும்.
- கடைசியாக, உங்கள் தலையில் தண்ணீரை ஊற்றவும்.
முதலில் உங்கள் கால்களில் தண்ணீரை ஊற்றும்போது, உங்கள் உடல் படிப்படியாக குளிர் வெப்பநிலைக்கு ஏற்ப நேரம் பெறுகிறது. இது இரத்த நாளங்கள் திடீரென சுருங்குவதைத் தடுக்கிறது. அதன்படி, இரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. பின்னர், உங்கள் உடலில் மெதுவாக மேல்நோக்கி தண்ணீரை ஊற்றுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, படிப்படியாக உங்கள் உடல் வெப்பநிலையை மாற்றுகிறது. இது உங்கள் உடலில் குறைந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ALSO READ: தினமும் இவற்றை சாப்பிட்டால் போதும்! உங்களுக்கு ஒருபோதும் மாரடைப்பு வராது..!
தவறான குளியல் முறைகளின் விளைவுகள்:
குளிக்கும்போது பெரும்பாலும் மக்கள் தலையில் மடமடவென குளிர் தெரிய கூடாது என நேரடியாக தண்ணீரை ஊற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வதால் உடலின் மேல் பகுதி திடீரென குளிர்ச்சியடையும், அதே நேரத்தில் உடலின் மற்ற பகுதிகள் சூடாக இருக்கும். வெப்பநிலையில் ஏற்படும் இந்த திடீர் மாற்றம் இரத்த நாளங்களை விரைவாக சுருங்கச் செய்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும்.