நீரிழிவு நோய் இருக்கிறதா? – எந்தெந்த பழங்களைத் தவிர்க்க வேண்டும்?
Fruits Aren’t Always Healthy : பொதுவாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது. இந்த கட்டுரையில் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பழங்கள் (Fruit) சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் சில பழங்களை சாப்பிடுவது உடலின் சர்க்கரை (Sugar) அளவையும் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நமது குழந்தை பருவத்திலிருந்தே பழங்கள்தான் நல்ல ஆரோக்கியத்திற்கான ரகசியம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் யார் எந்தப் பழங்களைச் சாப்பிடக்கூடாது என்று நமக்கு சொல்லப்படுவதில்லை. சில பழங்களில் அதிக அளவு சர்க்கரை மற்றும் பிரக்டோஸ் உள்ளன. இது இன்சுலின் அளவை பாதிக்கலாம். இந்த பழங்களை அதிகம் உட்கொண்டால், அது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
நீரிழிவு நோயாளிகள் குறிப்பாக மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், மாதுளை மற்றும் சப்போட்டா போன்ற பழங்களை அதிகமாக உட்கொள்வது அவர்களின் குளுக்கோஸ் அளவை சீர்குலைக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவற்றில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் பிரக்டோஸ் உள்ளன. ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் அதிகப்படியான இனிப்புப் பழங்களை சாப்பிட்டாலும், எந்த உடற்பயிற்சியும் செய்யாவிட்டாலும், படிப்படியாக அவரது எடை அதிகரித்து, உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
அதிக சர்க்கரை அளவைக் கொண்ட பழங்கள்
நொய்டாவைச் சேர்ந்த உணவியல் நிபுணர் டாக்டர் ரக்ஷிதா மெஹ்ரா, சர்க்கரை அளவை அதிகரிக்கும் பழங்கள் பற்றி கூறியுள்ளார். இருப்பினும், இந்த பழங்கள் அனைவருக்கும் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்காது ஆனால் அவற்றை குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களைத் தவிர்க்க வேண்டும். என்று டாக்டர் மெஹ்ரா கூறுகிறார்.




மாம்பழம்
மாம்பழம் நிச்சயமாக இனிப்பு சுவை கொண்டது. ஆனால் அதில் மிக அதிக அளவு பிரக்டோஸ் உள்ளது. ஒரு நடுத்தர அளவிலான மாம்பழத்தில் சுமார் 30 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது, ஆனால் அது பழுக்கும்போது, அதன் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஒரு நடுத்தர வாழைப்பழத்தில் சுமார் 14 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது.
லிச்சி
லிச்சி கோடையின் அதிகம் கிடைக்கும் சிறப்புப் பழமாகும், மேலும் இது மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால் லிச்சி பழத்திலும் சர்க்கரை நிறைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக 10-12 லிச்சி பழங்களில் சுமார் 29-30 கிராம் இயற்கை சர்க்கரை இருக்கலாம்.
மாதுளை: மாதுளை ஒரு ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது, ஆனால் அதில் சர்க்கரையும் நிறைந்துள்ளது. குறிப்பாக 1 கப் மாதுளை விதைகளில் சுமார் 24 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது.
என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?
சர்க்கரை பற்றி கவலைப்படாமல் சாப்பிடக் கூடிய பழங்களைப் பார்க்கலாம்.
- ஆப்பிள்
- ஜாமுன்
- கொய்யா
- ஆரஞ்சு