Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா..? உடலுக்கு இது சரியானதா..?

Healthy Breakfast Options: காலை வெற்று வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம், சிலருக்கு வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். தயிர், ஓட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.

Health Tips: வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா..? உடலுக்கு இது சரியானதா..?
வாழைப்பழம்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 19:20 PM

காலையில் எழுந்தவுடன் திடீரென பசி எடுத்தால் எதை சாப்பிட வேண்டும் என்று மனம் தேடும். அப்போது, உங்கள் முன் ஒரு வாழைப்பழம் (Banana) இருந்தால், அதை எடுத்து சாப்பிட விரும்புவது இயற்கையானது. ஆனால் வெறும் வயிற்றில் (Empty Stomach) அதை சாப்பிடுவது உடலுக்கு சரியானதா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழைப்பழம் ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைப்போம். அதேநேரத்தில், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வாயு (Gas trouble), அமிலத்தன்மை அல்லது இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் உண்மையா..? வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடலாமா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு தேவையான ஆற்றல் மூலமாக செயல்படுகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளது. அதன்படி, இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சிலருக்கு வாயு, அமிலத்தன்மை அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகளை தரும்.

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா..?

வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது. காலையில் ஜிம், வாக்கிங், ஜாக்கிங் செய்பவர்களுக்கு இது ஒரு சரியான சிற்றுண்டியாகும். உங்களுக்கு செரிமான சக்தி சீரானதாக இருந்தாலும், வாழைப்பழம் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. இது போன்றவர்கள் இது பலனையே தரும்.

வாழைப்பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தயிர், ஓட்ஸ் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இது, உங்கள் வயிற்றில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தி, ஊட்டச்சத்து சமநிலையை பராமரிக்கும்.

வெறும் வயிற்றில் யார் யார் சாப்பிடக்கூடாது..?

  • வயிற்றில் அமிலத்தன்மை அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது பிரச்சனையை உண்டாக்கும்.
  • வாழைப்பழம் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழமாகும், ஏனெனில் இது இரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் ஏற்றத்தாழ்வு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இதை சாப்பிடக்கூடாது.
  • வாழைப்பழம் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழம், ஆனால் வெறும் வயிற்றில் அதை சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதல்ல. சிறப்பான செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வாழைப்பழம் நல்லது. அதேநேரத்தில், செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை இருந்தால், வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)