AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூடான நீரில் குளிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா? எப்படி தவிர்ப்பது?

Hot Shower Dangers: மிகவும் சூடான நீரில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இரத்த அழுத்தம், பக்க வாதம் போன்ற தீவிர பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சூடான நீரில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சூடான நீரில் குளிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா? எப்படி தவிர்ப்பது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jun 2025 23:18 PM IST

திடீரென்று நம் உடலில் குளிர்ந்த அல்லது சூடான நீரை (Hot Water) ஊற்றும்போது, ​​உடல் அதிர்ச்சியை சந்திக்கும். மேலும் அந்த அதிர்ச்சியை சமாளிக்க முடியாமல், இரத்த அழுத்தம் (Blood Pressure) வேகமாக அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம். இது சில நேரங்களில் பக்கவாதம் போன்ற கடுமையான உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக ஒருவருக்கு உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது சில நேரங்களில் தலைச்சுற்றல், சோர்வு அல்லது அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. இந்த கட்டுரையில் உடலில் சூடான மற்றும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.

சூடான நீரில் குளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

நீங்கள் குளிக்கும்போது உங்கள் உடல் அதன் வெப்பநிலையை மிக விரைவாக சரிசெய்ய முயற்சிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலில் உள்ள இரத்தம் மேல் நோக்கி செல்லும். இது தமனி சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது, இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். மேலும் மிகவும் சூடான நீர் சருமத்தின் ஈரப்பதத்தை குறைக்கிறது. இதனால் சருமத்தை வறண்டதாகவும் கரடுமுரடானதாகவும் ஆக்குகிறது. மேலும் முடியில் சேதத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் சூடான நீரில் குளிப்பது முடியிலிருந்து இயற்கையான எண்ணெய்ப் படலத்தையும் நீக்குகிறது. இது முடியை பலவீனமாக்கி சேதப்படுத்தக்கூடும்.

எப்படி தவிர்ப்பது?

சூடான நீரில் குளிக்கும்போது முதலில் கால்களில் தண்ணீர் ஊற்றவும். பின்னர் மெதுவாக  கைகள் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு படிப்படியாக தண்ணீர் ஊற்றவும். கடைசியாக தலையில தண்ணி ஊற்ற வேண்டும். நீங்கள் முதலில் உங்கள் கால்களில் தண்ணீரை ஊற்றும்போது, ​​உங்கள் உடல் சூடான வெப்பநிலைக்கு படிப்படியாகப் பழகுவதற்கு நேரம் கிடைக்கும். இது இரத்த நாளங்கள் திடீரென சுருங்குவதைத் தடுக்கிறது மற்றும் இரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. தண்ணீரை மெதுவாக மேல்நோக்கி ஊற்றுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடல் வெப்பநிலையை படிப்படியாக மாற்றுகிறது. இதனால் ஆபத்து குறையும்.

எப்போதும் அதிக சூடாகவும் இல்லாத, அதிக குளிராகவும் இல்லாத வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். மிகவும் குளிர்ந்த அல்லது மிகவும் சூடான நீர் இரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. மேலும் தலைசுற்றல் அல்லது பலவீனம் உணர்ந்தால், அதிக நேரம் குளிக்க வேண்டாம். இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சூடான நீரில் குளிப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

குளிக்கும்போது தலைச்சுற்றல் ஏற்பட்டால், நீரின் வெப்பநிலையை சற்று குறைக்குமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். எப்பொழுதும் வெது வெதுப்பான நீரிலேயே குளிக்கவும். சூடான நீரில் குளிப்பதால் சருமம் அதிகம் பாதிப்படையும். மேலும் முடியின் ஆரோக்கியம் குறையும் என்பதால் எப்பொழுதும் அதிக சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும்.

Follow Us