AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தினமும் கிரீன் டீ குடிப்பதால் 2 வாரங்களில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்

Benefits of Green Tea : இன்றைய இளைஞர்கள் பலரும் தவறான உணவு பழக்கத்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும் என பிரபல மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமும் கிரீன் டீ குடிப்பதால் 2 வாரங்களில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் – ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jun 2025 23:40 PM IST

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக பல்வேறு கடின முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால் அவற்ற தவிர்த்து சிறு மாற்றங்களை செய்தாலே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நிலையில் தினமும் கிரீன் டீ (Green Tea) குடிப்பதால், இரண்டே வாரங்களில் உடலில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று ஒரு இரைப்பை குடல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.  கிரீன் டீயானது பதப்படுத்தப்படாத கேமல்லியா சினென்சிஸ் இலைகள் மற்றும் மொட்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சீனாவில் (China) இந்த கிரீன் டீ பிரபலமாக இருந்திருக்கிறது. பண்டைய சீன நூல்களில் கூறப்படும் நபரான ஷென் நாங், மனித உடலில் தேநீரின் நேர்மறையான விளைவுகளை முதன்முதலில் கவனித்ததாகக் கூறுகின்றன. கிரீன் டீயின் நன்மைகள் குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஆயுட்காலம் அதிகரிக்கும்

இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணர் டாக்டர். ஜோசப் சல்ஹாப், தி ஸ்டமக் டாக் என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், தினமும் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கினார். அதில், தினமும் கிரீன் டீ குடிப்பவர்கள் இதய ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. கிரீன் டி குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையும். மேலும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படும். மேலும் இவை நினைவாற்றலை மேம்படுத்தி டிமென்ஷியா ஏற்படுவதன் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும், இது உங்கள் ஆயுளையும் அதிகரிக்கிறது,”என்கிறார்.

கிரீன் டீ குடிப்பதால் இரண்டே வாரங்களில் ஏற்படும் நன்மைகள்

 

 

View this post on Instagram

 

A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc)

செரிமான ஆரோக்கியத்திற்கு கிரீன் டீ

கிரீன் டீ செரிமான ஆரோக்கியத்திற்கு நேர்மறையான நுண்ணுயிர் விளைவைக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, கிரீன் டீ குடிப்பதால் 10-14 நாட்களுக்குள் பைஃபிடோபாக்டீரியா மற்றும் பிற நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கிரீன் டீ

கிரீன் டீ உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது. ஃபேட்டி லிவரின் வளர்ச்சியைக் கூட மெதுவாக்குகிறது என்று டாக்டர் சல்ஹாப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.  மேலும் 2013 ஆம் ஆண்டு சர்வதேச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக செறிவுள்ள கேட்டசின்களைக் கொண்ட கிரீன் டீ, மது அருந்தாத கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதய ஆரோக்கியத்திற்கு கிரீன் டீ

தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்களின் இதய ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. மேலும், கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பவர்களில் பிற காரணங்களால் ஏற்படும் இறப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Follow Us