Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gut Health: குடல் ஆரோக்கியம் மேம்பட கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் !

Natural Foods for Digestion : மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் பலரும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். வயிறு என்பது இரண்டாவது மூளை என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பாதிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரி செய்ய கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Gut Health:  குடல் ஆரோக்கியம் மேம்பட கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் !
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 10 Jun 2025 23:36 PM

நமது உடலின் செரிமான அமைப்பில் பல்வேறு நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் (Virus) போன்ற உயிரினங்களும் அடங்கும். இந்த நுண்ணுயிரிகளின் சமநிலை குடல் ஆரோக்கியத்திற்கு (Gut Health) அவசியம். இது பலவீனமடைந்தால், அது செரிமான பிரச்னைகளுக்கும், மன நலன் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். ஆரோக்கியமான குடல் எல்லாவற்றையும் திறமையாக ஜீரணிக்கும். இது உடலுக்கு சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும், மலத்தை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடல்கள் நமது உடலில் ஹார்மோன் சமநிலைக்கு அவசியமான செரோடோனினையும் உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் குடல்கள் இரண்டாவது மூளை என்றும் அழைக்கப்படுகின்றன. மோசமான குடல் ஆரோக்கியம் இதயப் பிரச்னைகள் மற்றும் நீரிழிவு (Diabetic) போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.

குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்

  • முந்தைய நாள் சமைத்த சாதத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிட வேண்டும். முன்னோர்கள் பெரும்பாலும் இந்த பழைய சோற்றை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். இப்படி செய்வதால் அரிசியில் இயற்கையாகவே புரோபயாடிக்குகள் உருவாகின்றன. இந்த உணவு குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. இதை அடிக்கடி உட்கொள்வது குடல் அமைப்பை பலப்படுத்துகிறது.
  • மோரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. தயிரில் இருந்து வெண்ணெய் நீக்கப்பட்ட பிறகு எஞ்சியிருப்பது மோர் ஆகும். இது செரிமான அமைப்புகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள லாக்டோபாகிலஸ் என்ற பாக்டீரியா நமது குடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. இது உடல் சூட்டைக் குறைத்து, உடலை குளிர்விக்கும்.
  • ஆரோரூட் என்பது மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஒரு வகை வேர் காய்கறி ஆகும். இதனை பேஸ்டாக அரைத்து குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இது எளிதில் ஜீரணிக்கக்கூடிய பொருளாக இருப்பதால் குடல்களை வலுப்படுத்த உதவுகிறது. இது உடலுக்கு எளிதில் ஆற்றலை வழங்குகிறது.
  • நார்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். காய்கறிகள், பழங்களில் நார்சத்து அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும் உணவில் அதிக அளவு காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். குறைந்தது தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுவது நமது குடலின்  ஆரோக்கியத்திற்கு நல்லது.

இந்த மூன்று உணவுகளையும் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவது நமது குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களைக் குறைத்து நல்ல நுண்ணுயிரிகளை அதிகரிக்க உதவும். இது குடல்களை முழுமையாக சுத்தம் செய்யும். செரிமான பிரச்னைகள் குறையும். நீண்ட காலத்திற்கு, இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாக இருக்கும். இந்த சிறிய மாற்றங்கள் மூலம், நம் உடலையும் குடல்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...