AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ginger and Carrot Juice Benefits: மாறிவரும் பருவநிலை.. உடலை நோயில் இருந்து பாதுகாக்கும் இஞ்சி, கேரட் ஜூஸ்!

Boost Immunity Naturally: இந்தியாவில் வானிலை மாற்றத்தால் பருவகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இஞ்சியின் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிவைரல் பண்புகள் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் உடலை வலுப்படுத்துகிறது. இந்த ஜூஸ் தோல் பளபளப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. நீங்கள் இதனை தினமும் காலையில் குடிக்கலாம்.

Ginger and Carrot Juice Benefits: மாறிவரும் பருவநிலை.. உடலை நோயில் இருந்து பாதுகாக்கும் இஞ்சி, கேரட் ஜூஸ்!
இஞ்சி, கேரட் ஜூஸ்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jun 2025 14:53 PM IST

இந்தியா முழுவதும் வானிலை வேகமாக மாறி வருகிறது. அதாவது, கோடைக்காலம் (Summer) முடிந்து மழைக்காலம் தொடங்குகிறது. மாறிவரும் வானிலையில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும், இதனால் பருவகால நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றத்தின் விளைவி நமது ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும். வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப உடல் தன்னை மாற்றிக் கொள்ள நேரம் எடுக்கும். வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவு மாறும்போது, பல வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மிகவும் சுறுசுறுப்பாகின்றன. இது நோய்களில் அபாயத்தை அதிகரிக்கும். இந்தநிலையில், தினமும் காலையில் ஒரு கப் கேரட் (Carrot) மற்றும் இஞ்சி (Ginger) சாறு குடிப்பது உடலை உள்ளிருந்து ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

இஞ்சி, கேரட் ஜூஸின் பயன்கள்:

நோய் எதிர்ப்பு சக்தி:

இஞ்சி மற்றும் கேரட் என இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் பண்புகளை கொண்டவை. இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், வைரஸ் எதிர்ப்ப்ய் பண்புகளும் உள்ளன. இவை உடலில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராட உதவி செய்யும். அதேநேரத்தில், கேரட் உடலை உள்ளிருந்து பலபடுத்த உதவி செய்யும்.

தோல் பளபளப்பு:

இஞ்சி மற்றும் கேரட் சாறு சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்க பெரிதும் உதவி செய்கிறது. அதன்படி, இது முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகலை குறைத்து, இயற்கையான பளபளப்பை தருகிறது. இஞ்சி மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி வேர்களை அடியில் இருந்து வலுப்படுத்தி முடி உதிர்தலை குறைக்க பெரிதும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

இஞ்சி மற்றும் கேரட் சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதேநேரத்தில், இஞ்சி இரத்த உறைவை தடுக்கிறது. கேரட் கொழுப்பின் அளவை குறைக்கிறது. இவை 2ம் இதயத்திற்கு நன்மை தரும்.

செரிமான அமைப்பு:

இஞ்சி வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலத்தை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது வயிற்றுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

வேறு என்ன ஜூஸை பருகலாம்..?

மாறிவரும் பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலை நச்சு நீக்கவும், உடலை வலுப்படுத்தவும், நச்சு நீக்க பானங்களை உட்கொள்ளலாம். மேலும் கேரட், பீட்ரூட், நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை குடிப்பது ஒரு சிறந்த நச்சு நீக்க பானமாகும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

கேரட்-இஞ்சி சாறு எப்படி செய்வது?

  • கேரட் – 2
  • இஞ்சி – 1 அங்குல துண்டு
  • தண்ணீர் – 1 கப்
  • எலுமிச்சை மற்றும் தேன் (சுவைக்கேற்ப)

கேரட் மற்றும் இஞ்சியை நன்கு கழுவி நறுக்கி, மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, சாறு எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து உட்கொள்ளவும்.

Follow Us