Health Tips: யூரிக் அமிலம் உடலில் கட்டுப்பாட்டில் இல்லையா? இந்த 3 பழங்கள் சட்டென குறைக்கும்!
Uric Acid Reduce Tips: யூரிக் அமிலம் கண்டறியப்பட்டபிறகு உங்கள் உணவு பட்டியலில் இருந்து நிறைய உணவுகள் விலக்கப்பட வேண்டியதாக இருக்கும். கீரை, தக்காளி, பருப்பு, இறைச்சி, மீன் எண்ணெய், காபி, கேக்குகள் இவற்றைச் சாப்பிடவே முடியாமல் போகலாம். இருப்பினும், இந்த 3 பழங்கள் உள்ளன.
இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, துரித உணவுகளை சாப்பிட தொடங்குகிறோம். இது அலுவலக மதிய உணவாக இருந்தாலும் சரி, நண்பர்களுடனான நைட் அவுட்டாக இருந்தாலும் சரி. பெரிய பெரிய ஹோட்டல்கள் (Hotels) அல்லது சாலையோரக் கடைகளில், நாம் பரோட்டா, சிக்கன் ரைஸ், சவர்மா அல்லது பல்வேறு சுவைகளில் ரோல்கள் என எடுத்து கொள்கிறோம். இதன் விளைவாக, உடலில் யூரிக் அமிலத்தின் (Uric Acid) விளைவுகள் அதிகரிக்க தொடங்குகின்றன. ஆரம்பத்தில், பலர் இந்த யூரிக் அமிலத்தின் அளவு குறித்த புரிதல்கள் இல்லாமல் இருக்கின்றனர். இதன் விளைவாக, உங்களது உள்ளங்கால், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் வலி ஏற்பட தொடங்குகிறது. மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காரும்போது, உங்கள் பாதங்கள் வீங்க தொடங்குகின்றன. மேலும் இங்குதான் கீல்வாதம் தொடங்குகிறது.
அதன்படி, யூரிக் அமிலத்தை ஆரம்பத்திலேயே தடுக்க முடிந்தால், முதலில் பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இல்லையெனில், பிரச்சனை அதிகரிக்கும். முதலில் வலியுடன் தொடங்கினாலும், பின் நாளில் யூரிக் அமிலம் சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ALSO READ: பெண்களே உஷார்! தொப்புளில் அடிக்கடி வலியா? இந்த பிரச்சனைகளாக இருக்கலாம்!




யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த என்ன சாப்பிடலாம்..?
யூரிக் அமிலம் கண்டறியப்பட்டபிறகு உங்கள் உணவு பட்டியலில் இருந்து நிறைய உணவுகள் விலக்கப்பட வேண்டியதாக இருக்கும். கீரை, தக்காளி, பருப்பு, இறைச்சி, மீன் எண்ணெய், காபி, கேக்குகள் இவற்றைச் சாப்பிடவே முடியாமல் போகலாம். இருப்பினும், இந்த 3 பழங்கள் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால், இது யூரிக் அமிலத்தை வேகமாக குறைக்க உதவி செய்யும்.
செர்ரி பழங்கள்:
செர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடல் வலிகளைப் போக்கும். அதுமட்டுமின்றி, இந்த பழம் யூரிக் அமிலத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
எலுமிச்சை:
வைட்டமின் சி யூரிக் அமிலத்தின் மிகப்பெரிய எதிரியாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், நமக்கு ஆரோக்கியமானதாக மாறுகிறது. எலுமிச்சை மூலம் கிடைக்கும் வைட்டமின் சி அளவு உடலில் அதிகரிக்கும் போது, யூரிக் அமிலம் மந்திரம் செய்து குறைக்கும்.எனவே ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களை தொடர்ந்து சாப்பிடுங்கள். இதன்மூலம், யூரிக் அமிலத்தின் அளவு குறைவதை உணர்வீர்கள்.
ALSO READ: ஆஹா! ஆரஞ்சு தோலில் இவ்வளவு நன்மைகளா? தூக்கி மட்டும் போடாதீங்க!
ஆப்பிள்கள்:
வைட்டமின் சி மட்டுமல்ல. வைட்டமின் ஏ யூரிக் அமிலத்தைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் ஆப்பிள்கள் இந்த விஷயத்தில் சரியான பழமாகும். ஆப்பிளில் நிறைய வைட்டமின் ஏ உள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது மருத்துவரைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், அமிலத்தன்மையில் இருந்தும் விலகி வைக்கும்.