AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அன்பு பொழிந்துகொண்டே இருக்கிறது… வசூலில் ரூபாய் 50 கோடியைக் கடந்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்

Love Insurance Company Movie Box Office Collection: தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம். இந்தப் படத்தின் தற்போதையை கலெக்‌ஷன் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகின்றது.

அன்பு பொழிந்துகொண்டே இருக்கிறது… வசூலில் ரூபாய் 50 கோடியைக் கடந்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Apr 2026 21:02 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதன் நாயகனாகவும் மிகவும் ஆழமாக பதிந்து விட்டார். அதன்படி நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இதுவரை 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் முதல் படம் பிரதீப் ரங்கநாதனே இயக்கி நாயகனாக நடித்து இருந்தார். இரண்டாவதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ட்ராகன் படம். மூன்றாவதாக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான டியூட் மற்றும் தற்போது 4-வதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகும்.

இந்த நான்கு படங்களில் முன்னதாக வெளியான லவ் டுடே, டிராகன் மற்றும் டியூட் ஆகிய மூன்று படங்களும் பாகஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து 100 கோடிகள் வசூலித்து நடிகர் பிரதீப் ரங்கநாதனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே பிரதீப்பின் அடுத்தப் படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் 100 கோடி சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைப்பாரா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ரூபாய் 50 கோடியைக் கடந்தது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்:

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தற்போது வரை 54.3 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஹாலிவுட் ஸ்டைலில் உள்ள படம்.. கர திரைப்பட கதை குறித்து தெரிவித்த விக்னேஷ் ராஜா!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் படமான மிஸ்டர் எக்ஸ் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ!

Follow Us