AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நூறு சாமி படத்திலிருந்து நாளை வெளியாகும் மாய கனவோ பாடல்

Maaya Kanavo Song Promo Video From Nooru Saami Movie Out Now: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் நூறு சாமி. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

நூறு சாமி படத்திலிருந்து நாளை வெளியாகும் மாய கனவோ பாடல்
மாய கனவோ பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Mar 2026 15:36 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியான பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதை வென்ற விஜய் ஆண்டனி அதன் பிற்கு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சக்தி திருமகன். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் நூறு சாமி. இந்தப் படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்குகிறார். இவர் முன்னதாக நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிச்சைக்காரன் படத்தை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணி தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

நூறு சாமி படத்திலிருந்து நாளை வெளியாகும் மாய கனவோ பாடல்:

இந்த நூறு சாமி படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திஷன், சக்தி, காவ்யா அனில், கருணாஸ், பாடினி குமார், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி, தாமரை, கோடாங்கி வடிவேலு, முத்துஅழகி, சாரதா, சபிதா ராய், சபிதா ராய், ஏ என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ள நிலையில் நாளை 25-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு படத்திலிருந்து மாய கனவோ என்ற பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Also Read… கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன் – என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karuppu: நான் கருப்பு படத்தை பான் இந்திய படமாக இயக்க நினைக்கல – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!

Follow Us