AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல தமிழக அமைச்சரின் மகள் – யார் ஹீரோ தெரியுமா?

Kollywood New Debut: பிரபல அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா ஹார்ட்டின் என்ற படத்தின் மூலம் கதாநாயகிாக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தில் பேட்ட, மகான் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த சனந்த் ஹீரோவாக நடிக்க, கிஷோர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல தமிழக அமைச்சரின் மகள் – யார் ஹீரோ தெரியுமா?
சனந்த் - இமயா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Feb 2026 21:24 PM IST

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் (Thangam Thennarasu) மகள் இமயா ஹார்டின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகவிருக்கிறார். அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) பேட்ட, மகான் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த சனந்த் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக காதலில் கடந்து போகும், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இந்தப் படத்தை டிரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக அறிமுகமாகும் தமிழக அமைச்சரின் மகள்

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவின் மகள் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த படிப்பை முடித்திருக்கிறார். மேலும் நடிப்பிலும் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

இதையும் படிக்க : Pookie Movie: யூத் ஜெனரேஷன் காதல் கதையில்.. ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

இந்தப் படம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. திரைப்படம் வெளியாகும்போது இமயாவை அறிமுகபடுத்தும் விதமாக மிகப்பெரிய அளவில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கூடுதலாக அவர் திரைக்கதை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் கிஷோர் பல குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இது அவருக்கு இயக்குநராக முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

 

 

View this post on Instagram

 

A post shared by Trident Arts (@tridentartsoffl)

இமயாவை அறிமுகப்படுத்துவது தொடர்பாக பேசிய இயயக்குநர் கிஷோர், இமயாவை ஆடிஷன் மூலம் தான் தேர்வு செய்தோம். அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் அவர் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் என்பதே எங்களுக்கு தெரிந்தது. இமயாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது. அதற்காக அவர் தன்னை முழுமையாக தயார்படுத்தியுள்ளார். மேலும் முதல் படமே அவருக்கு பீல்குட் படமாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க : Abhishan Jeevinth: ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய அபிஷன் ஜீவிந்த்!

இந்தப் படத்தில் அவர் நடித்துள்ள சாதனா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும். அமெரிக்காவில் திரைக்கதை நுட்பங்களை படித்து விட்டு வந்திருக்கிறார். இதனால் இந்தப் படத்தில் அவரது திரைக்கதை பங்களிப்பும் இருக்கிறது. இமயா இந்தப் படத்தில் கேரக்டரை உணர்ந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் இரண்டு பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

Follow Us