Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GD Naidu Bridge Name Issue: ஜி.டி. நாயுடு பெயர் பிரச்சனை.. எதிர்க்கட்சி விமர்சனத்திற்கு தங்கம் தென்னரசு விளக்கம்!

Minister Thangam Thennarasu: சாதி அடிப்படையிலான பெயர்களை கொண்ட அனைத்து உள்கட்டமைப்புகளின் பட்டியலை வருகின்ற 2025 அக்டோபர் 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தநிலையில், ஜி.டி.நாயுடு என்ற பெயரில் சாதி இடம்பெற்றிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

GD Naidu Bridge Name Issue: ஜி.டி. நாயுடு பெயர் பிரச்சனை.. எதிர்க்கட்சி விமர்சனத்திற்கு தங்கம் தென்னரசு விளக்கம்!
அமைச்சர் தங்கம் தென்னரசுImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 11 Oct 2025 17:11 PM IST

கோயம்புத்தூரில் 10.1 கி.மீ நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 2025 அக்டோபர் 9ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) திறந்து வைத்தார். இருப்பினும், தென்னிந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாக கருதப்படும் ஜி.டி.நாயுடு பாலத்திற்கு (G.D.Naidu) ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயர் இடம்பெற்றிருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. நீதிமன்ற உத்தரவின்படி, குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் மாணவர்கள் விடுதிகள் என சாதி பெயர்கள் இடம்பெற்றிருந்தவற்றை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுவதற்கான வழிகாட்டுதல்களுடன் தமிழ்நாடு அரசு கடந்த 2025 அக்டோபர் 6ம் தேதி உத்தரவை பிறப்பித்தது. மேலும், சாதி அடிப்படையிலான பெயர்களை கொண்ட அனைத்து உள்கட்டமைப்புகளின் பட்டியலை வருகின்ற 2025 அக்டோபர் 14ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தநிலையில், ஜி.டி.நாயுடு என்ற பெயரில் சாதி இடம்பெற்றிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

ALSO READ: ஜிடி நாயுடு பாலம்.. மூட வைத்த கோவை மக்கள்.. நடந்தது என்ன?

அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்:


ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது தொடர்பாக அருப்புக்கோட்டை கிராம சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு முழுவதும் உள்ள தெருக்கள், ஊர்கள் மற்றும் சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது குறித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டபோது, சில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தது. இந்த பெயர்களைதான் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எதையும் குறிப்பிடவில்லை.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே இதை திரித்து பேசுகிறார். சாதி பெயர்களை நீக்கும் விஷயத்தில் எக்காரணத்தை கொண்டும் அரசியல் செய்ய வேண்டாம். இது சமூகத்திற்கு செய்யும் துரோகம். சாதி பெயர்களை நீக்கும் உத்தரவுகளை நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து பகுதிகளில் இருக்கும் சாதி பெயர்கள் நீக்கப்படும். நாங்கள் இதை அரசியலுக்காக செய்யவில்லை.

ALSO READ: தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் குறையும் கட்டணம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

அப்போது ஏன் கோயம்புத்தூர் பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். மிகப்பெடிய விஞ்ஞானியான ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்பதை நீக்கிவிட்டு ஜி.டி. என்றா வைக்க முடியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்னும் சிலரும் இதனை விமர்சனம் செய்கின்றனர். இவற்றை விதி விலக்குகளாகவே கருதப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை. எதிர்க்கட்சி தலைவ, எந்த நோக்கத்துக்காக அரசானை வெளியிடப்பட்டது..? பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர் ஏன் வைக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.