Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி தெருக்களுக்கு சாதிப் பெயர் கூடாது… அதற்கு பதிலாக ‘இந்த’ பெயர் வைக்கலாம்… – தமிழக அரசு உத்தரவு

Caste Names Ban : ஊர்கள், தெருக்கள், மற்றும் நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை வருகிற நவம்பர் 19, 2025 அன்றுக்குள் நீக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இனி தெருக்களுக்கு சாதிப் பெயர் கூடாது… அதற்கு பதிலாக ‘இந்த’ பெயர் வைக்கலாம்…  – தமிழக அரசு உத்தரவு
முதல்வர் ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Oct 2025 18:04 PM IST

தமிழகம் முழுவதும் ஊர் பெயர்கள் , தெருப் பெயர்கள், சாலைகளின் பெயர் ஆகியவற்றில் இருந்து சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin)  கடந்த ஜூன், 2025-ன் போது அறிவித்திருந்தது. மேலும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் காலனி என அழைக்கப்படுவதாகவும், காலனி என்ற பெயரையும் நீக்க வேண்டும் எனவும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலங்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த முயற்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் சாதிப்பெயர்களை நீக்குவதற்கு தமிழக அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

முதல்வரின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி அக்டோபர் 8, 2025 அன்று அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. மேலும் தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களை வைக்கலாம். அதே போல குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இனி நோயாளிகள் அல்ல… மருத்துவ பயனாளிகள் – தமிழக அரசு அறிவிப்பு

எம்பி டாக்டர் ரவிக்குமார் பாராட்டு

 

இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் படி இனி தமிழ்நாட்டில் எந்தவொரு ஊர்கள் சாதிப்பெயரில் இருக்கக்கூடாது எனவும் இந்த மாற்றங்கள் நவம்பர் 19, 2025 அன்றுக்குள் செயல்படுத்தப்படவேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி வருங்காலங்களில் ஊர் மற்றும் தெரு பெயர்கள் சாதிய அடையாளம் இன்றி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : பெரியார் உலகம்… திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இப்பொழுதும் பெரும்பாலன மக்கள்,  ஒரு ஊர் பெயரை வைத்து ஒருவரின் சாதி அடையாளங்களை தெரிந்துகொள்ளும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இது வருங்காலங்களில் மாறும் எனவும் அதற்கான முயற்சியாக தமிழக அரசின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.