Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நெல்லை டூ சென்னை.. வந்தே பாரத் ரயிலில் புறப்படும் நேரம் மாற்றம்.. நோட் பண்ணுங்க

Chennai - Tirunelveli Vande Bharat Express : திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சமீபத்தில் நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பேட்டிகள் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

நெல்லை டூ சென்னை.. வந்தே பாரத் ரயிலில் புறப்படும் நேரம் மாற்றம்..  நோட் பண்ணுங்க
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Published: 08 Oct 2025 06:53 AM IST

சென்னை, அக்டோபர் 08 :  சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் விரைவு ரயிலில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.  நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் 2025 அக்டோபர் 9ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் நிலையில், புறப்படும் நேரத்தில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் நாட்டிலேயே மிக வேகமாக செல்லும் ரயிலாக உள்ளது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், மேலும் பல இடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. வந்தே பாரத் ரயில்களில் வேகமான பயணம், சொகுசு இருக்கைகள், தானியங்கி கதவு என பல வசதிகள் உள்ளன. இந்த ரயிலில் பொருளாதார ரீதியாக பார்த்தால், உயர் நடுத்தர வர்க்க மக்களே இதில் பயணிக்க முடியும்.

ஏனென்றால் ஒரு டிக்கெட் விலையே ரூ.2,000 வரை இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை பெங்களூரூ, சென்னை – நெல்லை, சென்னை – கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தயில் அதிக வரவேற்பு உள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரிப்பை தொடர்ந்து, கூடுதல் பேட்டிகளும் இணைக்கப்பட்டது. மேலும், நீண்ட நாட்கள் கோரிக்கையாக சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியிலும் நின்று செல்லும். 2025 அக்டோபர் 9ஆம் தேதியான நாளை முதல் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்.

Also Read : இனி நோயாளிகள் அல்ல… மருத்துவ பயனாளிகள் – தமிழக அரசு அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலில் புறப்படும் நேரம் மாற்றம்

இதனால், நெல்லை வந்தே பாரத் ரயிலின் புறப்படும் நேரத்தில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதாவது, தினமும் நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, இந்த ரயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

Also Read : நடுவானில் பறவை மோதி ஏர் இந்தியா விமானம் சேதம் – திக் திக் நிமிடங்கள் – என்ன நடந்தது?

தற்போது இந்த புறப்படும் நேரத்தில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025 டிசம்பர் 7ஆம் தேதி முதல் காலை 6.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5 நிமிடங்கள் முன்னதாக அதாவது காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.