சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை – தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கும் 10 விமானங்கள் – பரபரப்பு தகவல்
Heavy Rain in Chennai : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 5, 2025 அன்று 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.

சென்னை, அக்டோபர் 5 : தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை (Rain) பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அக்டோபர் 5, 2025 அன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. அதற்கு ஏற்ப சென்னையில் கடந்த 2 மணி நேரமாக சூரைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடிக்கும் விமானங்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இலங்கை கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து வந்தது. இந்த நிலையில் மழை குறைய வாய்ப்பில்லை என்பதால் விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.




இதையும் படிக்க : விஜயின் பிரச்சார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.. கரூர் போலீஸ் அதிரடி
மேலும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து வருகின்றன. இதனையடுத்து பாதுகாப்பாக தரையிறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் பரபரப்பாக காட்சியளித்தது. விரைவில் உரிய பாதுகாப்புடன் விமானங்கள் தரையிறக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Severe Cyclonic Storm ‘Shakhti’ over Northwest and adjoining Northeast Arabian Sea: Warnings for fishermenhttps://t.co/WZaE9upmJ8 pic.twitter.com/2ZPz3Ov813
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 4, 2025
இதையும் படிக்க : கேப் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள் இதோ.. வானிலை மையம் அலர்ட்
தமிழ்நாட்டில் அக்டோபர் 5, 2025 அன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழையில் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சென்னையில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.