தலைவர் 173 படத்தில் தொடரும் இயக்குநர் பிரச்சனை? அடுத்த இயக்குநர் யார் தெரியுமா

Rajinikanth and Ashwath Marimuthu Movie Update: தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் பேசப்படும் விசயமாக உள்ளது தலைவர் 173 படத்தின் சர்ச்சை. இந்தப் படத்தில் தற்போது இரண்டாவது முறையாக இயக்குநர் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தலைவர் 173 படத்தில் தொடரும் இயக்குநர் பிரச்சனை? அடுத்த இயக்குநர் யார் தெரியுமா

ரஜினிகாந்த்

Published: 

14 Apr 2026 11:15 AM

 IST

தமிழ் சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் வருடத்திற்கு ஒன்றாவது திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பக்கப்படுகின்றது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த அவரது 173-வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ரஜினிகாந்தின் தலைவர் 173 மற்றும் 174 படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில் முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தினை இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்தப் படத்தில் இருந்து சுந்தர் சி விலகுவதாக அடுத்த 3-வது நாளே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரும் இந்தப் அப்டத்தில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தலைவர் 173 படத்தில் தொடரும் இயக்குநர் பிரச்சனை?

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தான் ரஜினிகாந்திடம் ஒரு கதையை விவரித்ததாகத் தெரிவித்தார். மேலும், அந்தக் கதைக்களம் மிகவும் தனித்துவமானது என்றும், ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஆகிய இருவரால் மட்டுமே அதைச் சிறப்பாகக் கையாண்டு நடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ​​ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

முன்னதாக, அஷ்வத் சிலம்பரசன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சிலம்பரசன் தற்போது தான் ஈடுபட்டுள்ள மற்றொரு திரைப்படப் பணிகளில் மும்முரமாக இருப்பதால், அப்பணிகள் நிறைவடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தாமதத்தின் காரணமாக, அஷ்வத் மாரிமுத்து தனது அடுத்த படமாக ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கியுள்ளார்; இப்பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Also Read… Kayadu Lohar: சாய் நைட் 2 மணிக்கு கால் பண்ணாரு.. பவழ மல்லி பாடலில் நடனமாட காரணம் இதுதான் – கயாடு லோஹர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்