Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Killer : எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி.. ‘கில்லர்’ படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடக்கம்!

Killer Movie Shooting Begins With Pujas : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் பல ஆண்டுளுக்கு பின், இவர் இயக்கி, நடிக்கும் படம்தான் கில்லர். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று 2025, ஜூன் 27ம் தேதியுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Killer : எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி.. ‘கில்லர்’ படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடக்கம்!
எஸ்.ஜே. சூர்யா கில்லர் பட ஷூட்டிங் தொடக்கம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 27 Jun 2025 18:22 PM

நடிகர் அஜித் குமாரின் (Ajith kumar) வாலி (Vaalee) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suyah). இவர் இந்த படத்திற்கு முன் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். வாலி படத்தின் வெற்றியை அடுத்து, விஜய்(Vijay) நடிப்பில் குஷி என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். பின் இவர் இயக்கிய “நியூ” (New) என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக்கவும் தன்னை அறிமுகம்படுத்திக்கொண்டார். அதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பின் படங்களை இயக்குவதை தவிர்த்து, மற்ற இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். மேலும் தற்போது எஸ்.ஜே. சூர்யா தமிழில் முன்னணி வில்லனாக பல படங்ககளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் படத்தை இயக்கவுள்ளார். கில்லர் (Killer) என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் பூஜை இன்று 2025, ஜூன் 27ம் தேதி, சென்னையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் பட பூஜை புகைப்படம் :

கில்லர் பட பூஜை :

இயக்குநர் மற்றும் கதாநாயகனாக எஸ்.ஜே. சூர்யா பணியாற்றவிருக்கும் இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் தமிழில் அயோத்தி மற்றும் கிஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் கவினுடன் நடித்திருக்கும் கிஸ் படமானது இன்னும் வெளியாகவில்லை. எஸ்.ஜே. சூர்யாவின் இந்த கில்லர் படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், இன்று 2025, ஜூன் 27ம் தேதியில் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜைக்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இதில் எஸ்.ஜே. சூர்யா கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கில்லர் படத்தின் கதைக்களம்

எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கூட்டணியில் உருவாகும் இப்படமானது அதிரடி காதல் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா மற்றும் மெக்சிகோவில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கில்லர் படத்தை வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படமானது பான் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.